ஒரு முறை நான் சாலையை கடந்து செல்கையில் ஒரு சிறுவன் ஒரு நாய் குட்டியை அடித்து சித்ரவதை செய்வதை பார்க்க நேர்ந்தது. அவனை தடுத்து நிறுத்தினேன். ஏன் என கேட்டதற்கு விடை தராமல் முறைத்தான். அவனை பற்றி விசாரிக்கும் பொழுது கிடைத்த தகவல்.
கந்தன், அவனுக்கு வயசு ஏழு. கீழ்தட்டு வர்கத்தை சேர்ந்தவன். அப்பா இறந்துவிட்டார், அம்மா வீட்டு
வேலை செய்யும் தொழிலாளி. குழந்தைக்கு சாப்பாடு, உடுக்க உடை, அதற்காக போராடும் வாழ்க்கை .
. பகலில் வீட்டு வேலை, சாயங்காலம் பூ விற்பது. இதுவே அவள் செயல்முறை. கந்தனை பார்த்துக் கொள்வது அவன் பாட்டிதான்
அப்பன் குடிகாரன்..கந்தனுக்கு நினைவு தெரிந்தவரை அவனின் தந்தை, அவனின் தாயை அடிப்பதை பார்த்திருக்கிறான். அவன் சுற்றி உள்ள ஆண்களும் அப்படியே.
அவனின் தந்தைக்கு வீண் சண்டையை விலைக்குவாங்குவது பொழுதுபோக்கு. அப்படி ஏற்பட்ட சண்டையில் உதய் வாங்கி, உடல் நிலை சரியில்லாமல் இறந்தே போனான்..
கந்தனை பள்ளியில் சேர்த்தாள் அவள் தாய். படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. அவன் சக மாணவர்களோடு அவனால் விளையாட முடியவில்லை. சக மாணவர்களை அடிக்க ஆரம்பித்திருக்கிறான். அவனை நண்பனாக ஏற்க மற்ற பிள்ளைகள் பயப்படுகிறது.
ஒரு முறை ஆசிரியர் வீட்டுபாடம் செய்து வராததற்கு கண்ணிடிக்கவே, கல்லை எரிந்திருகிறான். இவ்வளவு கோபமும் ஆக்ரோஷமும் எங்கிருந்து வருகிறது? சுற்று சூழல்.
மற்றும் அவன் தந்தை தாயை அடித்தது பார்த்து வந்தமையால் ஏற்பட்ட கோபம்.
அதுமட்டுமல்லாமல் அவன் மேல் கவனம் செலுத்தவோ ,அக்கறை காட்டவோ, நல்லது கேட்டதை எடுத்து சொல்லவோ ஆள் இல்லை. பள்ளியிலும் ஆசிரியர்கள் கவனிக்கவில்லை.
கந்தனுக்கு ஏற்பட்டிருப்பது "அட்டன்ஷன் டெபிசிட் டிசாடேர்" என்று கூறலாம். அரவணைக்கப் படாமல் போனதால் ஏற்பட்டது. அதனால் வந்தது கோபம் வெறுப்பு.. யாரிடமாவது காட்டவேண்டும். அன்று மாட்டியது நாய் குட்டி. இப்படியே விட்டுவிட்டால் மோசமான நிலைக்கு மாறவும் வாய்ப்புள்ளது.
மீட்(MEAD) என்கிற சைகொலோக்ஸ்ட்(PSYCHOLOGIST), தேவேலோப்மேன்ட் பீரியடை (DEVELOPMENT PERIOD)
சில ச்டஜஸ் ஆக பிரிகிறார்.
சில ச்டஜஸ் ஆக பிரிகிறார்.
௮) ப்லே ஸ்டேஜ்- பிறந்த குழந்தை முதல் நான்கு வயது வரை
ஆ) கேம் ஸ்டேஜ்- ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயது வரை
முதல் ஸ்டேஜில் குழந்தைகள் தன்னை சுற்றி உள்ளவர்களை இமிடேட் செய்யும். தனக்கென்று ஒரு பாணியை உருவாக்கத் தெரியாது. பார்க்கும் கோணமும் ஒரே வழிதான்
யோசிக்க ஆரம்பிப்பது அடுத்த ஸ்டேஜில் தான் . கேம் ஸ்டேஜில் தான் விதிகளையும் (RULES), நிபந்தனைகளும் (REGULATIONS), மதிப்பு (VALUES) மற்றும் நன்னடத்தை (MORALS) கற்றுகொள்ளும் தருணம் ஏற்படுகிறது.
கந்தனை பொறுத்தவரை அவன் இரண்டாவது ஸ்டேஜில் இருக்கவேண்டியவன், ஆனாலும் அவன் முதல் ஸ்டேஜிலேயே இருக்கிறான். அவன் வளரும் சூழல் இரண்டாம் ஸ்டேஜிக்கு போகவிடாமல் தடம் மாற்றிக்கொண்டிருகிறது .
அவன் அம்மாவோ, அவன் ஆசிரியரோ அவனை ஊக்குவித்து, அரவணைத்து இருந்தால் இந்த கோபமும் ஆக்ரோஷமும் குறைந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும் .
குழந்தைகள் நல்ல முறையில் வளர சூழலும் (சரௌண்டிங்க்ஸ் ) முக்கியம்.. .
No comments:
Post a Comment