Wednesday, December 28, 2011

என் உயிர் காதலிக்கு

மான் போல் விழிகள் ரெண்டு
தகதகக்கும் உடலும் கொண்டு
மேவி வரும் காற்றினிலே
தாவி வரும் வெள்ளி நிலவே
நழுவிய உன் பார்வையிலே
என் மனம் இங்கு துடிக்குது
பூவும் உன் முகம் கண்டு
தலைத் துவண்டோடுது
தித்திக்கும் தேன் துளி தான் - உன்
அகரங்கள் சுரந்திடுமோ
பூ மொய்க்கும் கருவண்டு - உன்
கரு விழிகள் ஆகிடுமோ
மோன நிலையில் என்னுள்ளே
மோகித்திருகின்றேன்
யாசகம் கேட்க்கும் எனை
யாபித்துக் கொள்வாயடி.
சட்டென பார்க்கும் பார்வை - எனை
சக்கையாய் பிழியுதடி
மெத்தென உன் கால்கள் தொட்டு
மொத்த உயிரும் லயிக்குதடி
காட்டருவி போல் தவழும் - உன்
கட்டுக்குள் அடங்கிய கூந்தல்
வீணை போல் அதை மீட்ட
தேடி வரும் என் விரல் நுனிகள்
உன் பாதையில் நான் வரவே
விலகிச் செல்லும் உன் பாதங்கள்
வேண்டுமடி அது எனக்கு
ஏங்கித் தவிக்கும் என் மனக் கண்கள்.

Saturday, December 17, 2011

அன்பே

சிக்கலாகி விடுகிறது
சில நேரங்களில்
நீ
ஒற்றை வார்த்தையில்
பதில் அளிக்கும் பொழுது

குட்டையில் தேங்கிய
தண்ணிரில்
பாசியாய் படிந்த
உன் நினைவுகள்
இப்போது
தண்ணீரும் பாசியும்
வேறுபாடில்லாமல்

நாம் பேசிய
வார்த்தைகள்
அனைத்தையும்
தூசுத் தட்டி
பார்க்கிறேன்

நாசிக்குள் காற்றாய்
புகுந்து
என் உயிருக்குள்
கலந்தவளே ..
காட்சிப் பிழையாய்
இருந்திடாமல்
என் காதலை
ஏற்கத் துணிவாயடி

மனதினுள் புள்ளியிட்டாய்
அதை
கோலமாய் மாற்றிட
இயலாதோ

வண்ணத்துப் பூச்சியாய்
வடிவெடுத்து
என் நெஞ்சுக் கூட்டுக்குள்
புகுந்தவளே
என் மனமும்
காய்ந்திடா மலர்தானடி
அதில் காலம்
முழுதும் இருப்பாயடி

உயிரே நீ என்னுள்ளே

எனக்குள்ளே ஒளிந்திருக்கும்
உறைந்த ரத்தமாய் நீ....
என் உடம்பில் ஊறும்
உஷ்ணத்தீயால்
உன்னை ஆர்பரிக்கிறேன்
உன் மூச்சுக் காற்றை
நான் வாங்கிக் கொண்டேன்
கண்மணியே...
ஒவ்வொரு செல்லிலும் புகுந்து
உன் உயிரை நான் காத்திடுவேன்
எண்ணங்களை மட்டுமா
பரிமாறிக்கொண்டோம்
உயிரையும் தானே
அதனால்
கலங்காதிரு ஆருயிரே
நீ என்றென்றும்
என்னுள்ளே .............

Thursday, December 15, 2011

சிங்காரச் சென்னை

ஊரு நல்ல ஊரு
அதுக்கு சென்னைநு பேரு
நூறு ரூபா நோட்ட சுருட்டி
காது குடையும் ஊரு

வீட்டுக்கொரு காரிருக்கு - இங்க
காருக்குக் காரு துணையிருக்கு
வீடே இல்லாம ஆளிருக்கு - அதை
ஏன் கேட்கவும் ஆள் இருக்கு .

சாதி இருக்கு சங்கம் இருக்கு
ஊர சுத்தி சாக்கட இருக்கு - அதுல
ஊறி போன மனுஷனுக்கு
உறவுக்காரன் மறந்திருக்கு

நீளமான கடல் இருக்கு
கடலோரம் பல சிலை இருக்கு
பல தலைவர்களின் சமாதிகள்
பார்க்கும் சுற்றுலா தளமாயிருக்கு

கோயிலிருக்கு குளமிருக்கு - சில
குளத்துல தண்ணி வத்திருக்கு
ஆடி மாசம் வந்து போனால்
கூழ் ஊத்த ஆள் இருக்கு

பள பளக்கும் ரோடிருக்கு - அதுல
பயணம் செய்ய சிலருக்குத் தான்
கொடுப்பினை இருக்கு

ரோடா? கல் மேடா?
அழும் வாகனத்தை கேட்டா
கொடுக்கும் கணக்கு

தெருவுக்கு தெரு விளக்கிருக்கு
அதுல ஒன்னு ரெண்டு கண் சிமிட்டும்
சூரியனும் போயே போச்சுன்னு
சில விளக்குகள் தூங்க செய்யும்

மந்திரி வீடா, மந்திரி மகன் வீடா
அங்க மட்டும் விளக்கெரியும் - ஆனா
மாசமாசம் வரியா கட்டும்
மனுஷன் வயித்துல தான் விளக்கெரியும்

ஊருக்குள்ளே மலைகள் போலே
குப்பைகளும் குவிந்திருக்கும்
குப்பைத் தொட்டினு பேரிருக்கும் - அதுவும்
குப்பையோடு குப்பையா கிடக்கும்

நாற்றத்தோடு காற்று வரும் - அது
கொசுக்களையும் அழைத்துவரும்
கொசுக்களும் பறந்து வந்து
இலவசமா நோய்கள் தரும்

வீதிக்கொரு கோயில் கட்டு
அது அந்த காலம்
வீதிக்கொரு சாராயக் கடை
இது இந்த காலம்

வீதியோரம் மரம் நடுங்கள்
அது அந்தக் காலம்
மரமில்லாமல் தண்ணீர் பாய்ச்சுவோம்
இது இந்த காலம்

சுவரெல்லாம் சுவரொட்டிகள் - அதை
ரசிப்பவங்க நாங்க ..
மறைமுகமா கால்நடைக்கு
உணவு அளிப்பவங்க..

ஆயிரம் குறைகள் இருந்திடினும்
இது எங்க ஊரு தான்
எல்லாம் ஒன்றாய் கூடி
வாழும் சிங்கார சென்னை தான்..

Tuesday, December 13, 2011

ஒரு கைம்பெண்ணின் சலனம்

சலனமற்று கிடந்த மனதில்
சல்லடையாய் உன் நினைவுகள்

பாரத்தை இறக்கி வைக்க
பார்கின்ற என் மனது

ஒப்பனையற்ற வார்த்தைகளால்
ஓர் வரியில் சொல்லிவிட்டாய்

கட்டுக் கடங்காமல் வருகிறது
கண்ணீர் மழை துளியாய்

மறுப்பு சொல்ல வழியில்லை
வெறுப்புக் காட்ட முடியவில்லை

கருத்தைச் சொல்லி விலகி இருந்தும்
எதிர்த்து நிற்கும் ஆசைகள்

மனத்தால் எண்ணம் ஒன்றினும்
மனிதனுக்கென்று ஒரு ஞாயம் உண்டு

தீயும் சுடும் என் தெரிந்தப் பின்னும்
தீயில் குளிப்பது நல்லதன்று

மனமெனும் குரங்கு வந்து போகும் -அதை
அடக்கி வைத்தல் நல்லதின்று

பேச வேண்டாம், பழக வேண்டாம்
ரசிக்க வேண்டாம் - ஆனாலும்
மறக்கவும் வேண்டாம்

உன் நினைவலைகள்
உரசிக் கொண்டு போகட்டும்

சலமற்று இருப்பது போல்
என் மனமே நடிக்கட்டும்

உன் மேனி தனை தொடும் காற்றில்
என் வாசனை தான் வந்திடுமே-அதில்
என் ஸ்பரிசத்தை உணர்ந்துவிடு
கனவினிலே என்னை தோடு .........


Thursday, December 1, 2011

மங்காத்தா - எனது பார்வையில்

மங்காத்தா - எனது பார்வையில்..

500 கோடி அம்மோ! நமக்கே கேட்க்கும் போதோ படிக்கும் போதோ உடல் சிலிர்கிறது அல்லவா ? அவளவும் யு எஸ் டாலர்ஸ்....சர்வசாதரணமாக மெட்ரோ நகரங்கரங்களில் சூதாட்டம் என்ற பெயரில் உலா வருகிறது. அதை குறுக்கு வழியில் அபேஸ் செய்ய ஒரு கூட்டம், அதை கண்டிபிடிக்க போலீஸ் கூட்டம் ....இது தான் கதை.....ஆங் ....கடைசியில் வரும் ட்விஸ்ட் ம்ம். அதுவும் பரவாஇல்லை....எதிர்பார்க்காதது தான். சரி யார் நடிச்சிருக்காங்கநு பார்ப்போமா ?

அஜித் குமார் (தலை என்று செல்லமாக அழைக்கபடுபவர் , இதிலும் அப்படியே..)

அர்ஜுன் (ஆக்ஷன் கிங் ...இந்த படத்திலும் அங்ஙனமே அழைக்கபடுகிறார்)

வைபவ், ஜெயப்ரகாஷ், மஹத், பிரேம்ஜி அமரன் , லக்ஷ்மி ராய் த்ரிஷா, அண்ட்ரியா, அஞ்சலி அரவிந்த் ஆகாஷ் ....மற்றும் பலர்.

இயக்கம் : வெங்கட் பிரபு

தயாரிப்பு: தயாநிதி அழகிரி

இசை : யுவன் ஷங்கர் ராஜா

கதை நு ஒன்னும் இல்லங்க ...கிரிக்கெட் சூதாட்டம் மையமா எடுத்திருக்க படம்..... ஐ பி எல் மேட்ச் இன் நடக்கும் போது நடக்கும் சூதாட்டமே கதை.. அஜித் ஆறு மாதங்கள் சஸ்பெண்டான போலீஸ் ஆபீசர். அந்த காலகட்டத்தில் த்ரிஷாவை சந்திக்கிறார் ...காதல் வருகிறது...தண்ணி ..தம்மு, குட்டி ...என்று அனைத்து லூட்டிகளும் செய்துக் கொண்டுத் திரிகிறார். அதன் நடுவே சூதாட்டம் மூலமாக 500 கோடி பணம் புழங்கபோவதாகவும், அது ஆறுமுகசெட்டியார் (ஜெயப்ரகாஷ்) பொறுப்பில் விடபோவதாக ஒரு தகவல் வர , ஒரு கூட்டணி அதை கொள்ளை அடிக்க உருவாகிறது. ஆறுமுகசெட்டியார் மும்பையில் ஒரு முக்கிய சூதாட்டப் புள்ளி. அவருக்கு கீழே சுமந்த்(வைபவ்), பைசல் (அரவிந்த் ஆகாஷ்) இன்னும் சிலர் வேலை செய்கிறார்கள். மாத மாதம் மாமூல் வாங்கி கொண்டு அவர்கள் தொழிலை ஆதரிக்கும் எஸ் ஐ கணேஷ் (அஷ்வின்) . பிரேம்ஜி யும் அவன் நண்பனும் அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஷ்வின் கூட்டணியில் அந்தப் பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் இடுகிறார்கள். அதற்கு முன்னரே இருவர் அந்த பணத்தை அபேஸ் செய்ய முயற்சியும் நடக்கிறது. அதில் ஒருவர் அஜித், அந்த மற்றொருவர் யார் என்பது சஸ்பென்ஸ்.

வைபவ் கும்பல் திட்டமிடுவது தெரியவர அஜித் அவர்களுடன் கூட்டு சேர்கிறார். கொள்ளை அடித்து அவர்களை போட்டு தள்ள யோசிக்கிறார். கொள்ளை அடிக்கும் விதம் புதுசு என்றாலும் , லாஜிக்கும் க்ராபிக்ஸும் பயங்கரமாக விளையாடுகிறது

கடைசியில் வைபவ் கூட்டணி முழுதும் சாகிறது...தலை உள் பட.....பின்பு தலை உயிரோடு வருகிறார்...அதனுடன் அவர் கூட்டணி யார் என்பதும் தான் ட்விஸ்ட்.

ஒன்றரை மணி நேரத்த்தில் முடிக்க வேண்டிய படம் . அனால் முடிக்கமுடியாமல் திணறுகிறது... கதை லிக்ன்க் வேண்டும் என்பதற்காகவே கதாநாயகிகளை போட்டிருகிறார்கள் . லக்ஷ்மி ராய் கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஷுர். அவரை தவிர மற்ற கதாநாயகிகள் சும்மா பாட்டுக்காகவும் , பணயக் கைதியாகவும் இருக்க வே இதில் இருகின்றனர் ...

படம் முழுக்க அஜித் அஜித் அஜித் ... நிறைய ஹாலி வுட் நடிகர்களின் பாடி லாங்குவேஜ் ஜை காப்பி அடித்திருக்கிறார் அஜித் .தலை ரசிகர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் " ஆஹா " என ரசிக்கும் அளவுக்கு இருக்கிறார்.

நிறைய ஹாலி வுட் படங்களை தழுவி இருக்கிறது .

பணம் வந்தால் பற்றும் (பத்தும்) பறந்து (மறந்து ) போகும் என்பது பழமொழி . அந்த பத்தில் ஒன்று மனசாட்சியும் என்பது இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

சரி... பொழுதுப் போக்கிற்காக ஒரு முறை தான் மங்காத்தா விளையாடி பாருங்களேன் ... சும்மா ஒரு ஜாலி க்கு ....


மயக்கம் என்ன - எனது பார்வையில்.

செல்வராகவன் படைப்பில் வெளி வந்திருக்கும் படம்... தனுஷ், ரிச்சா கங்கோபத்யை மற்றும் தனுஷ் நண்பர்களாக சிலர்... இசை -ஜி வி பிரகாஷ், ஒளிபதிவு - ராம்ஜி, தயாரிப்பு - ஜெமினி க்ரூப்ஸ்.

கதை என்னவென்றால் கார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) ஒரு ப்ரீ லான்ஸ் போட்டோகிராபர். நல்ல சான்ஸ் தேடி அலையும் பிள்ளை. அம்மா அப்பா கிடையாது.... தங்கை ஒருத்தி இவர்களுடன் நண்பர்கள் ...நம் செல்வராகவன் படத்தில் நண்பர்கள் இன்றி எது ? சரி கதைக்கு வருகிறேன் . கார்த்திக்கோட(தனுஷ்) நண்பன் தன் பெண் தோழியை அறிமுகம் படுத்தி வைக்கிறார். எடுத்தவுடன் மோதல் ஆகிறது இருவருக்கும்...அது காதலின் அறிகுறி என்று தெரியாமல்... பின்பு தெரியவருகிறது. அதற்கு நடுவில் கார்த்திக் ஒரு பெரிய போடோக்ராபரிடம் சான்ஸ் கேட்டு செல்கிறார்.. நிராகரிக்க படுகிறார். " 'அட்லீஸ்ட்' உங்க அச்சிடன்ட் ஆகா சான்ஸ் கிடைக்குமா" என்றும் கெஞ்சி பார்கிறார். "அட்லீஸ்ட்" என்று அந்த பெரிய போடோக்ராபர் நக்கலாக சிரித்து ஏளனம் போது நமக்கும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது. பாவமான தனுஷ் முகத்தை பல படத்தில் பார்த்து விட்டோம். இதிலும் இதிலும் நிறைய இடங்களில் பார்க்க முடிகிறது. தான் எடுக்கும் போடோஸ் லாயக்கில்லை என்று பல இடங்களில் நிராகரிக்கு பட்டு ஒரு சான்ஸ் கிடைத்து போடோஸ் எடுத்து தருகிறார். அனைத்தும் புகைப்படமும் சரி இல்லை என்று நிராகரிக்கப் பட்டு மனம் நொந்து குடிக்கிறார்.

ஹீரோயின் யாமினி (ரிச்சா) வேண்டுமென்றே கார்த்திக்கிடம் நெருங்கி பழகுகிறாள். கார்த்திக்கும் அவளை பிடிக்கிறது. ஆனால் நண்பனுக்கு துரோகம் செய்ய மனம் மறுக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த எல்லையை மீறும் சூழ்நிலை. நண்பர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர். அதற்கு நடுவே கார்த்திக் எடுத்த புகைப் படம் நேஷனல் காக்ராபிக் புக் கில் வேறொரு நபரின் பெயரில் வெளியாகி இருப்பதாய் கண்டு கோபப் படுகிறார். சென்று வாதிடுகிறார். முடியவில்லை. திருமணம் முடிந்து வாழ்கையை ஓட்ட... செய்தி தாளில் அந்த நபருக்கு விருது வழங்கப்பட்டதை கண்டு மாடியிலிருந்து விழுகிறார். கொஞ்சம் மூளை பாதிப்படைகிறது. தோற்று விட்டோம், ஒதுக்க படுகிறோம் போன்ற மன ஆழுத்தம் அவனை வாட்டுகிறது. எல்லாவற்றையும் தாங்கி கார்த்திக் ஒரு வழிக்கு கொண்டு வருகிறாள் நம் ஹீரோயின். கடைசியில் இன்டர்நேஷனல் வைல்ட் போடோக்ராபிக் அவார்ட் வாங்குகிறார்.

" I am thankful to all those who said 'no' because of them, I did it myself "

ஐன்ஸ்டீன் வாக்கு படி தன் மனைவியால் முன்னுக்கு வந்தாலும் 'வேண்டாம்', 'நன்றாக இல்லை ' என்று நிராகரிக்க பட்டாலும் அவன் திறமையை வெளி கொண்டு வந்து சாதிக்கிறான்.இது தான் கதை.

கதையின் பின் பாதி ஒரு ஆங்கிலபடத்தின் சாயல்லில் இருக்கிறது.

கார்த்திக், ஒரு மத்தியதர நபர். அவருக்கெப்படி அவ்வளவு விலை உயர்ந்த

டெலிபோட்டோ லென்ஸ் எப்படி வாங்கினார் ?..... நண்பர்கள் அவ்வளவு க்லோசாக இருக்கும் பட்சத்தில் எப்படி துரோகம் செய்ய மனம் வருகிறது.?...ஜீனியஸ் என்று தனுஷ் எதற்கு அழைக்கப் படுகிறார்?...... பெங்குயன் போட்டோ எடுக்க அண்டார்டிக்கா சென்றாரா என்ன... ? இப்படி பல கேள்விகள் மனதில் உதிக்கிறது...

அங்கே அங்கே பிச்சி பிச்சி எடுத்து ஓட்ட வைத்து நேஷனல் ஆவார்ட் வாங்கிய தனுஷ் தன்னை நிக்கவைப்பார் என்ற தைரியத்தில் படம் எடுத்திருக்கிறார் அவர் அண்ணன்.

"மயக்கம் என்ன" ..... தயக்கமாய் தான் இருக்கிறது பாருங்கள் என்று சொல்வதற்கு.... ஒரு வேண்டுகோள் ஆண் நண்பர்கள் தன் பெண் தோழியை சக நண்பனுக்கு அறிமுகப் படுத்தவேண்டாம்