Saturday, September 17, 2011

மகளே மகிழ்ச்சி

மகளே
மகிழ்ச்சி

தொலைவிலிருந்து
தொலைபேசியில்
விவரம் அறிந்தேன்

காலத்தின் கோலம்
உன்னையும் என்னையும்
பிரித்து வைத்திருகிறது
உச்சி முகர்ந்து
தனியே அமர்த்தி
உற்றார் உறவினருக்கு
அழைப்பு விடுத்து
ஆசீர்வதிக்க
நான் பக்கத்தில் இல்லை

இப்போது நானும்
உறவினரை வந்து
எட்டிப் பார்த்து
ஓடிவிடும்
சூழ்நிலையில் ..

வரும் காலம்
ஒளிமயமாய் இருக்க
நிகழ் கால
சந்தோஷங்களை
தொலைத்துக் கொண்டிருக்கிறோம்

கண்மணியே
உனக்கொரு அறிவுரை

நீ உடலளவில் மட்டுமே
பக்குவமடைந்திருகிறாய்
மனதளவில் இல்லை
மெய் சிலிர்க்கும் பேச்சுகளும்
புண் முறுவல் வார்த்தைகளும்
அறுவருக்கும் தீண்டல்களும்
அன்பான கெஞ்சல்களும்
அம்புப் போல் தாக்கும்
அது அனைத்தும்
முகச் சாயங்களே
அன்றி உண்மை இல்லை

உன்னை முதலில் நேசி
நீயே உனக்குத் தோழி

புத்தகம் வாசிக்க
கற்றுக் கொள்

நெஞ்சில் உரமும்
கண்களில் கனலும்
இருக்கட்டும்

வாழ்வில் நெறியும்
வார்த்தையில் கடுமை
இருக்கட்டும்

மஞ்சள் நீராட்ட
ஆசை தான்
வேறு வழி இல்லை
என் கண்ணீரால்
உன் மனதை
நீராட்டுகிறேன் .

மங்காத்தா - எனது பார்வையில்

500 கோடி அம்மோ! நமக்கே கேட்க்கும் போதோ படிக்கும் போதோ உடல் சிலிர்கிறது அல்லவா ? அவளவும் யு எஸ் டாலர்ஸ்....சர்வசாதரணமாக மெட்ரோ நகரங்கரங்களில் சூதாட்டம் என்ற பெயரில் உலா வருகிறது. அதை குறுக்கு வழியில் அபேஸ் செய்ய ஒரு கூட்டம், அதை கண்டிபிடிக்க போலீஸ் கூட்டம் ....இது தான் கதை.....ஆங் ....கடைசியில் வரும் ட்விஸ்ட் ம்ம். அதுவும் பரவாஇல்லை....எதிர்பார்க்காதது தான். சரி யார் நடிச்சிருக்காங்கநு பார்ப்போமா ?

அஜித் குமார் (தலை என்று செல்லமாக அழைக்கபடுபவர் , இதிலும் அப்படியே..)

அர்ஜுன் (ஆக்ஷன் கிங் ...இந்த படத்திலும் அங்ஙனமே அழைக்கபடுகிறார்)

வைபவ், ஜெயப்ரகாஷ், மஹத், பிரேம்ஜி அமரன் , லக்ஷ்மி ராய் த்ரிஷா, அண்ட்ரியா, அஞ்சலி அரவிந்த் ஆகாஷ் ....மற்றும் பலர்.

இயக்கம் : வெங்கட் பிரபு

தயாரிப்பு: தயாநிதி அழகிரி

இசை : யுவன் ஷங்கர் ராஜா

கதை நு ஒன்னும் இல்லங்க ...கிரிக்கெட் சூதாட்டம் மையமா எடுத்திருக்க படம்..... ஐ பி எல் மேட்ச் இன் நடக்கும் போது நடக்கும் சூதாட்டமே கதை.. அஜித் ஆறு மாதங்கள் சஸ்பெண்டான போலீஸ் ஆபீசர். அந்த காலகட்டத்தில் த்ரிஷாவை சந்திக்கிறார் ...காதல் வருகிறது...தண்ணி ..தம்மு, குட்டி ...என்று அனைத்து லூட்டிகளும் செய்துக் கொண்டுத் திரிகிறார். அதன் நடுவே சூதாட்டம் மூலமாக 500 கோடி பணம் புழங்கபோவதாகவும், அது ஆறுமுகசெட்டியார் (ஜெயப்ரகாஷ்) பொறுப்பில் விடபோவதாக ஒரு தகவல் வர , ஒரு கூட்டணி அதை கொள்ளை அடிக்க உருவாகிறது. ஆறுமுகசெட்டியார் மும்பையில் ஒரு முக்கிய சூதாட்டப் புள்ளி. அவருக்கு கீழே சுமந்த்(வைபவ்), பைசல் (அரவிந்த் ஆகாஷ்) இன்னும் சிலர் வேலை செய்கிறார்கள். மாத மாதம் மாமூல் வாங்கி கொண்டு அவர்கள் தொழிலை ஆதரிக்கும் எஸ் ஐ கணேஷ் (அஷ்வின்) . பிரேம்ஜி யும் அவன் நண்பனும் அரவிந்த் ஆகாஷ் மற்றும் அஷ்வின் கூட்டணியில் அந்தப் பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் இடுகிறார்கள். அதற்கு முன்னரே இருவர் அந்த பணத்தை அபேஸ் செய்ய முயற்சியும் நடக்கிறது. அதில் ஒருவர் அஜித், அந்த மற்றொருவர் யார் என்பது சஸ்பென்ஸ்.

வைபவ் கும்பல் திட்டமிடுவது தெரியவர அஜித் அவர்களுடன் கூட்டு சேர்கிறார். கொள்ளை அடித்து அவர்களை போட்டு தள்ள யோசிக்கிறார். கொள்ளை அடிக்கும் விதம் புதுசு என்றாலும் , லாஜிக்கும் க்ராபிக்ஸும் பயங்கரமாக விளையாடுகிறது

கடைசியில் வைபவ் கூட்டணி முழுதும் சாகிறது...தலை உள் பட.....பின்பு தலை உயிரோடு வருகிறார்...அதனுடன் அவர் கூட்டணி யார் என்பதும் தான் ட்விஸ்ட்.

ஒன்றரை மணி நேரத்த்தில் முடிக்க வேண்டிய படம் . அனால் முடிக்கமுடியாமல் திணறுகிறது... கதை லிக்ன்க் வேண்டும் என்பதற்காகவே கதாநாயகிகளை போட்டிருகிறார்கள் . லக்ஷ்மி ராய் கொஞ்சம் ஓவர் எக்ஸ்போஷுர். அவரை தவிர மற்ற கதாநாயகிகள் சும்மா பாட்டுக்காகவும் , பணயக் கைதியாகவும் இருக்க வே இதில் இருகின்றனர் ...

படம் முழுக்க அஜித் அஜித் அஜித் ... நிறைய ஹாலி வுட் நடிகர்களின் பாடி லாங்குவேஜ் ஜை காப்பி அடித்திருக்கிறார் அஜித் .தலை ரசிகர்கள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் " ஆஹா " என ரசிக்கும் அளவுக்கு இருக்கிறார்.

நிறைய ஹாலி வுட் படங்களை தழுவி இருக்கிறது .

பணம் வந்தால் பற்றும் (பத்தும்) பறந்து (மறந்து ) போகும் என்பது பழமொழி . அந்த பத்தில் ஒன்று மனசாட்சியும் என்பது இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

சரி... பொழுதுப் போக்கிற்காக ஒரு முறை தான் மங்காத்தா விளையாடி பாருங்களேன் ... சும்மா ஒரு ஜாலி க்கு ....