பயணம் - சைலென்ட் மூவீஸ் ,பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வந்த படம்.
இயக்கம் - ராதாமோகன், இசை - ப்ரவின் மணி.
தமிழ் படத்தில் ஒரு புதிய முயற்சி.
பயணம் கிளம்பும் போது எல்லோருக்கும் ஒவ்வொரு அனுபவம். ஒரு சிலருக்கே இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருக்கும் . அப்படியொரு த்ரில் உள்ள பயணம் தான் இந்த படத்தின் கதை.
ராதா மோகன் ஒரு புதிய களத்தில் இறங்கி இருக்கிறார்.
நடிகர்கள் - நிறையபேர். அதில் முக்கியமானவர்கள் நாகர்ஜுன், பிரகாஷ்ராஜ், சான கான், ரிஷி, இன்னும் பல. சென்னைலிருந்து டெல்லி கிளம்பும் விமானம் சில தீவிர வாத கும்பலால் கடத்தப் படுகிறது. 100 பயணிகள் உள்ள விமானம். பயணிகள் உயிருடன் வேண்டுமென்றால், யூஸூப் கான் எனும் தீவிரதியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். தீவிரவாதியை விடிவித்து பயணிகளை எப்படி காப்பாற்றுவது என்ற போராட்டம் தான் கதை. என் எஸ் ஜி செக்யூரிட்டி ரெப்பாக வருகிறார் ரவீந்திரன் (நாகார்ஜுன் ), மிடுக்கான தோற்றம். கமாண்டோ வேஷம் அவருக்கு அழகாக பொருந்துகிறது. கோமொண்டோஸ் சண்டைப் போடுவது மட்டும் அல்ல பிரச்சனைகளை எப்படி யோசித்து கையாள்கிறார்கள் என்பதை அற்புதமாக சொல்லியிருகிறார்கள்.
அரசும், அரசை சார்ந்த ஊழியர்களும் எங்ஙனம் தீர்வு காணாமல் யோசித்துக் கொண்டே இருப்பது நம்மையும் யோசிக்க வைக்கிறது .
பத்திரிகை துறையினால் வரும் நன்மை, தீமை, அதை சொல்லி இருக்கும் விதமும் அழகு.
படத்திற்கு முதல் பிளஸ் பாயிண்ட் 'விமானம்' . ஆர்ட் டைரக்டர் கதிர் ஒரு 'ஒஹோ ' போடலாம். 'செட்டிங் செய்த விமானம் என்று துளி கூட சந்தேகம் ஏற்படாத வகையில் அருமை.
இரண்டாவது பிளஸ் பாயிண்ட் வசனம்.. டி.எஸ் . ஞானவேல்.
தீவிரவாதிகளை ரொம்பத் தீவிரமாக காட்டமல் கொண்டு சென்று இருக்கிறார்கள். 26/11 ஞாபகத்தில் கொண்டுவராமல் கதையை பார்த்தால் அவர்களும் நல்லவர்கள் என தோன்ற ஆரம்பிக்கும்.
தீவிராதிகள் துப்பாக்கி காட்டி மிரட்டும் போது இருக்கும் அச்சம், ஒரு சில நிமிடங்களில் காணமல் போய்விடுகிறது. பார்லிமெண்டில் சண்டையிட்டு பேச்சு வார்த்தை நடத்துவது போல் இருக்கிறது சில இடங்களில்.
மற்ற படி படம், இந்த பயணம், கலவரத்துடன் போகும் அழகான பயணம்.
இந்த பயணத்தை மறக்காமல், மறுக்காமல் பாருங்கள் . ஒரு புது அனுபவம் கிடைக்கும்.
No comments:
Post a Comment