எனக்கு தெரிந்த ஒரு ஆண் குழந்தை, அவனுக்கு ஐந்து வயதிருக்கும். அவன் பார்ப்பதற்கு சகஜமான குழந்தை (நோர்மல் சைல்ட்) போல தான் இருப்பான். பார்க்க அழகாவும் ஆரோகியமாகவும் இருப்பான்.
ஆனால் அவனிடம் எனக்கு சில மாற்றங்கள் தெரிந்தது. முகத்தில் ஒரு வாட்டம் இருக்கும். புன்னகை பூபதர்க்கு காசு கொடுக்க வேண்டும். அப்படி முகத்தை இறுக வைத்திருப்பான். அவனுடன் மற்ற பிள்ளைகள் விளையாடுவதை தவிர்த்தது. காரணம், அவனால் கண்டுகொள்ள முடியவில்லை, அவன் சின்ன பிள்ளை தானே.
அவனின் தாயார் பணிக்கு செல்பவள். வீட்டில் வேலைக்கு ஒரு ஆயாவை நியமைத்துவிட்டார்கள்.. அவனின் தந்தையும் பயங்கர பிஸி. அவனுடன் நேரம் செலவு செய்வது எப்படி என்றால் சாயங்காலம் மொடோர்பய்க்கில் ஒரு ரவுண்டு , அவ்வளவு தான். அப்படி சாயங்காலம், ராத்திரி வேளையிலாவது பிரியாமல் இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. அவ்வபோது பிள்ளையை தன் பாட்டியிடம் விட்டுவிட்டு டூர் கிளம்பி விடுவார்கள் .
அவனுக்கு ஒரு தங்கையும் பிறந்தால். குழந்தையை பார்த்துக்கொள்ள இயலாமல் மூன்று மாதத்திலேயே தன் தாயிடம்(ஊரில் ) விட்டுவிட்டு பணிக்கு செல்ல தொடங்கிவிட்டாள். தன்னோடு விளையாடா ஒரு துணை வந்துவிட்டது என்ற ஆனந்தத்தில் மிதந்த அந்த குழந்தைக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மனதிற்குள்ளேயே ஒரு வெறுப்பு. அதனால் பிடிவாத குணம், எதை கண்டாலும் தூக்கி எறிவது போன்ற சேஷ்டைகள் செய்ய ஆரம்பித்தான்.
அவன் சேஷ்டைகள் மிகுதி ஆனதே தவிர குறைய வில்லை. மற்ற பிள்ளைகள் மீது சிறுநீர் கழிப்பதும், 'தூ' 'தூ' என்று துப்புவது அவனை பொறுத்தவரை விளையாட்டு.
பார்ப்பவர்கள் அவனை பின்னாடி திட்டினார்களே தவிர காரணம் கண்டு சொல்ல முற்படவில்லை.
அவனை அழைத்து அறிவுரை கூறவும் முடியாது. காரணம் அவன் குழந்தை. என்ன செய்வது?
வளர்ந்தவர்களுக்கு இருக்கும் எண்ணமும், புரிதலும், ஆசைகளும் சின்னஞ்சிறு பிள்ளைகளுக்கு இருக்குமா? கண்டிப்பாக இருக்கும், சதவிகிதத்தில் தான் மாறும்.
அந்த குழந்தை அப்படி இருக்க யார் காரணம் என்று நினைகிறீர்கள் , அவனா? அவன் பெற்றோரா?
'அவன் நன்றாக இருக்கத்தானே உழைக்கிறோம்' என்று அவர்கள் கூறும் கருத்தும் ஒத்துகொள்ளபடவேண்டியது தான். சிறு வயதில் பிள்ளைகளுக்கு தேவை அரவணைப்பும், அன்பும் தவிர வேறு ஒன்றும் இல்லை.
போதுமான நேரம் ஒதுக்க வேண்டும்.
தனக்கு யாரும் இல்லை என்ற ஒரு குற்ற உணர்வு சிறு வயதிலேயே வந்துவிடும். வளர, வளர யார் உண்மையாக அன்பு செழுத்துபவர்கள் என்று புரியாமல் போய் விடும் .
அது மிகவும் சங்கடமான சூழ்நிலையை அந்த குழந்தைக்கு கொண்டு தரும்.
ஆகையால் பெற்றோர்கள் குழந்தைகளின் மீது அரவணைப்பை காட்ட நேரம் ஒதுக்கவேண்டும் என்பது என் கருத்து.
This comment has been removed by the author.
ReplyDeleteஇதில் வேறு கருத்துக்கே இடம் இல்லை என்று நினைக்கிறேன். பின்னால் இனம் புரியாத வயதில் ஏற்ப்பட்ட மனக்குறைகளை குழந்தைகளாலும் அடையாளம் கான முடியாது, அது ஏதோ வேண்டாப் பழக்கமாக மாறியிருக்கும். அன்பும் அரவணைப்பும் கண்டிப்பும் தைரியமும் ஊட்ட வேண்டும். அவர்களுக்காகதானே சம்பாதிக்கிறோம் என்பது ஒரு சமாதானமே.
ReplyDelete