Monday, February 7, 2011

இரண்டு வெட்டப்பட்ட கைகளுடன் ஆரம்பமாகிறது படம். உண்மை நிகழ்வுகளை நேரிலே பார்த்தால் தோன்றும் கசப்பும் வலியும் ஏற்ப்படுத்தும் காட்சிகள். வயது வந்த பெண்களுக்கு நடந்து வரும் சீர்கேடுகளை அழகாக சொல்லும் கதை.
தனக்கு நடந்த அநீதிக்கு புகார் செய்ய போகும் குடும்பத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகளும், நடுவர்க்க குடும்பத்தை சீண்டி பார்த்தால் என்னாகும் நிலை, அது தான் கதையின் கரு.
கதையின் நாயகன் ஜே கே (சேரன்) , வித்யாசமான கோணத்தில் தந்த மிஷ்கினுக்கே அந்த பெருமை போய் சேரும்.
கொடுத்த பாத்திரத்தை நிறைவாய் செய்திருக்கிறார் சேரன். உண்மையான ஜே கே (பிலோசொபர்) சொல்லியபடி யதார்த்தமாய் பார்கிறார் ஒவ்வொரு விஷயத்தையும்.
ஒரு நிகழ்வு, அவரவர் கோணங்களிலிருந்து எவ்வாறு மாறுபடும் என்பதையும் புரியவைக்கிறார் மிஷ்கின் . அது நாயகனின் பக்குவத்தையும், அனுபவத்தையும் சொல்லவைக்கிறது. .
ஜூதாஸ் (ஜெயப்ரகாஷ்) அவருக்கு ஒரு ஹாட்ஸ் ஆப் .. மனதிலே நிற்கும் ஒரு கதாபாத்திரம். பிண அறையில் பிணமாக வாழ்கையை ஓட்டுகிறார். அவருக்கேற்பட்ட சலிப்புகள், "இவ்வளவு தாண்டா வாழ்க்கை " என்று வலிக்காமல் ஊசியை ஏற்றுவது போல் உள்ளது. 'OBSERVER IS OBSERVED' , தத்துவஞானி ஜே கே யின் வரிகளிலிருந்து எடுத்தது, இங்கே அழகாக பொருந்தி உள்ளது . இப்படி ஒரு அறிவுப்பூர்வமான ஜூதாஸ் சை தந்த மிஷ்கினுக்கு வாழ்த்துக்கள்.
"கொஞ்சமா அறிவு இருக்கிற இவங்களே இவ்வளவு பண்ணா, நிறைய அறிவு இருக்கிற நம்மள ஒன்னும் பண்ண முடியாதா" என்கிற வசனம் பேஷ் .
ஒய் ஜி மகேந்திரன் மற்றும் லக்ஷ்மி, பிற்பாதியில் வந்தாலும் நல்ல அழுத்தமான கேரக்டர். அதிலும் லக்ஷ்மியை பார்க்கும் போது நமக்கே ஆக்ரோஷம் வருகிறது.
அவர்கள் தன்னுடைய மகளுக்கு இழைக்க பட்ட கொடுமை வேறு யாருக்கும் வரக் கூடாது என்பதை உயிர் விடும் தருணத்திலும் சுட்டிக் காட்டி இருப்பது அற்புதம்.
கதையோடு இணைந்து அழகாக செல்வதற்கு முக்கிய காரணம் இசையும் , போடோக்ராபி. சீட்டின் முனையில் உட்கார வைக்கிறது சில இடங்களில்.
கதையில் டூயட் இல்லை. அதுவே பிளஸ் பாயிண்ட்.
சஸ்பென்ஸ் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கப் படுகிறது. அதற்கு இன்னும் ஒரு பேஷ் போடலாம்.
அமீரின் குத்தாட்டமும் கூட ஆடும் இளம் கூட்டமும் அருமை.
எது எப்படி யானாலும் பணபலம் இருந்தால் என்னவெல்லாமோ செய்ய முடியும். அதை அடக்க ஒரு யுத்தம் தேவைப் படுகிறது. அதற்கான புனல் தான் "யுத்தம் செய்".
ஒட்டுமொத்தத்தில் அருமையான படம். கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்.

2 comments:

  1. Vasu

    you have reported very nicely without distrubing the main story....generally people who ever gives an opinion would spit the story line.....you have got a very good writing ability....i have become ur fan....now

    Hari

    ReplyDelete