Thursday, January 26, 2012

நண்பன் - எனது பார்வையில்

நண்பன்....
ஏற்கனவே நிறைய பேர் ஹிந்தி யில் பார்த்திருப்பீர்கள்.. திரும்ப தமிழில் என்ன நம்ம ஷங்கர் சார் சொல்லியிருப்பார் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் ., அதே காரணம் தான் எனக்கும்...சென்று பார்த்தேன்.. ஒரு வித்யாசமும் இல்லை. அதே அதே.... ஆனால் தமிழில்...ரீமேக் செய்து பணம் விரயம் செய்ததற்கு பதில் டப் செய்திருக்கலாம்.
சரி படம் பார்க்காதவர்களுக்கு ஒரு கதை முன்னோட்டம்.... இதோ...........
பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வெங்கட் ராமகிருஷ்ணன் (ஸ்ரீகாந்த்) , சேவற்கொடி செந்தில் (ஜீவா) , பஞ்சவன் பாரிவேந்தன்(விஜய்) . கூட படிக்கும் இன்னொரு வகுப்பினன் ஸ்ரீவத்சன் (சத்யன்). இவர்களது கல்லூரி நிர்வாகியாக விருமாண்டி "வைரஸ் சந்தானம் . துண்டு மீசை தான் இல்லை... அப்படியே ஹிட்லர் ரின் பிரதிபலிப்பு.
மிகுந்த புத்திசாலி என்று தன்னை தானே மார் தட்டிக் கொள்ளும் கேரக்டர்.
மார்க் ஒன்றே ஒரு மாணவன் வாழ்கையை தீர்மானிக்கும் என்று கூறி கஷ்டப் படுத்தும் மாணவர்களை , எதையும் விரும்பி செய்தால் தானாக நடக்கும் என்ற புது என்னத்தை உருவாக்கும் நமது ஹீரோ. நான்கு வருட கல்லூரி வாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளும், ஏமாற்றங்களும், வெற்றிகளும் தோல்விகளும் எடுத்து சொல்லும் கதை.
வெங்கட் கு(ஸ்ரீகாந்த்) வைல்ட் லைப் போடோக்ராபர் ஆகவேண்டும் என்று ஆசை . தந்தையின் ஆசையை நிறைவேற்ற வந்து சேர்ந்து படிக்கிறார். செந்தில் (ஜீவா) வுக்கு வாழ்கையே பயம். சின்ன வயதிலிருந்தே தன் குடும்ப பாரத்தை நினைத்து பயம்..... பாரி கு (விஜய்)எந்த வித கவலையும் இல்லை. .. அவரே முதலாக வருகிறார் (ஹீரோ ஆயிற்றே) ...
சத்யன் எபோதும் இவர்களை இன்சுல்ட் செய்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர்க்கு புத்தி புகட்ட ஆசிரியர் தினம் அன்று மேடைபெச்சுக் காக தயார் செய்திருக்கும் கட்டுரையை கொஞ்சம் மாற்றி எழுதுகிறார் பாரி. அதுவே சவாலை முடிகிறது.. கடைசியில் வெங்கட் போடோக்ராபர் ஆகிறார? செந்தில் படித்து முடித்து வேலை கிடக்கிறதா ? நம்ம பாரி என்ன ஆகிறார் என்பது தான் கதை.
மேடை பேச்சு ...குலுங்க குலுங்க சிரிக்க வைத்தாலும்.... ஆங்கங்கே நெளிய வைக்கிறது... "கற்பழிப்பு"என்ற வார்த்தைகளை பிள்ளைகள் தமிழ் அகராதியில் தேடாமல் இருந்தால் சரி.
ஷங்கர் சார் கதை யை காப்பி அடித்தார் சரி... ஹிந்தி படத்தில் வரும் கேரக்டர்களின் பாடி லாங்குவேஜ் சையும் காப்பி அடிக்கவேண்டுமா என்ன ? அதற்க்கு பெயரையும் மாற்றாமல் இருந்திருக்கலாமே?
கதையின் நாயகி ரியா ( இலியான ) பாட்டுக்காகவும் , நம்ம ஹீரோ வுக்கு ஜோடி அவளாவே... இருபினும் அவர் பேசும் தமிழ் கதிர்க்கு கொஞ்சம் குளிர்ச்சி தான்.. (தமிழ் பேசும் பெண்களே தமிழ் ஒழுங்காக பேசுவதில்லை ).
இசை: ஹாரிஸ் ஜெயராஜ் . இரண்டு பாடல்கள் கேட்க்கும் படியாக இருக்கிறது.... " என் பிரெண்ட் அ போல யாரு மச்சான்" , " அஸ்கா லஸ்க " நல்ல இருக்கு.
அது என்ன கடைசியில் விஜயின் உண்மையான பெயர் இப்படி இருக்கிறது என்பது புலப் படவில்லை " கொசாக்கி "பாப்பு " பசப்புகழ்". கதையில் ட்விஸ்ட் இருக்கும் சரி.. பெயரிலேயே ட்விஸ்ட் ஆ ?
எது எப்படியோ..... ரெண்டே முக்கால் மணி நேரம் சுபராக செல்லும் ஒரு ஜாலியான படம்

Tuesday, January 17, 2012

கண்மணியே ஏன் மறந்தாய்

தோள்களிலே உனை தாங்கி
தாலாட்டு பாடினேனே
வாயினிலே இட்ட சோறு
வயிற்றுக்குள் போவதற்குள்
அழு குரல் கேட்டவுடன்
அன்னத்தை தள்ளி வைத்து
அணைக்க வந்த கரங்களையே
ஏன் மறந்தாய் கண்மணியே !

கண்ணுறக்கம் இல்லாமல் - என்
கால்களிலே தான் சுமந்தேன்
நோய் நொடி அண்டாமல்
நாளாகப் பார்த்திருந்தேன்
காயாத கனியமுதே
கண்மணியே ஏன் மறந்தாய் !

தேனாக பேசுவியே
தெவிட்டாத கனி அமுதே
மானாக ஓடி வந்து
மடியினிலே தலை புதைப்பாய்
தாயாக பெற்றெடுத்தேன்
தங்கமே என் கற்கண்டே
சீராக பார்த்தேன் உனை
சீற்றம் ஏன் கொண்டாயடா !

வயதாகி போனதுவோ
வழித் தடங்கல் மறந்தனவோ
கை கால்கள் விழுதனவோ - உனக்கு
பாரமாக ஆகினேனோ
குழந்தையாய் ஆனேனடா
குறைகளை அதை பாராயடா
குமரனாய் இருந்து விட யாரும்
வரங்களை பெற வில்லையடா !

முது வயதும் ஒரு நாள் வந்திடுமே
உன்னால் மறுக்கயிலாதடா
என் அருமை மகனே நீயும்
எனை மறந்து போனாயடா
காலன் என்னை தொட்டப் பின்பும்
கண்மணியே உனை மறவேனடா!

Thursday, January 12, 2012

malaysia vasudevan hits

http://youtu.be/jGTrZDp4c1A

http://youtu.be/kiDAKd2Jd48

http://youtu.be/iETA1aeGKts

http://youtu.be/B4T0fjYELw8

http://youtu.be/jn7CZrK39Aw

http://youtu.be/a0tXKdL6Mbk

http://youtu.be/Q8MPSbmZjy4

http://youtu.be/3J095E4z16I

http://youtu.be/IhgbBxyZB0s

http://youtu.be/i4Hw9pVkGhg

Sunday, January 8, 2012

என் மனதில் நின்ற ஒரு சம்பவம்

ஷேர் ஆட்டோ காரன் "எம்மா குழந்தைகளை கூட்டிகிட்டு கீழே இறங்குமா " என்று சத்தம் போட்டார். அதற்க்கு அந்த பெண்மணி "நான் பசங்களுக்கும் பைசா குடுக்கிறேன் பா" என்று சொல்லி பிள்ளைகளை அமரவைத்துக்கொண்டர். கை பேசியில் 'எங்கே? எங்கே?' என கேட்டு வர அவருக்கு அந்த இடம் புதிது என்று கணிக்க முடிந்தது. அந்த பெண் பிள்ளைகளும் "அப்பாடா உட்கார இடம் கிடைத்து ரொம்ப சந்தோசம் ல "என்று பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள். அதில் ஒரு குழந்தை பேசுவதில் கொஞ்சம் வித்யாசம் இருந்தது. அந்த குழந்தை ஆட்டிசம் குழந்தை போல தோன்றியது...
கொஞ்சம் இருட்டியும் விட்டது.. அப்போது அந்த பெண் முகத்தில் சின்னக் கவலை தென் பட நானே பேச துவங்கினேன். "நீங்க எங்க போகணும் ?" என் முதல் கேள்வியாக இருந்தது. அதற்க்கு அவர்கள் "தெரியல ங்க எதோ அட்ரஸ் கொடுத்திருக்காங்க.. வேலம்மாள் ஸ்கூல் எங்க தெரியுமா ?" என்று கேட்டார்கள். அதற்க்கு நான் "நான் இறங்கும் இடத்திலிருந்து கொஞ்சம் ௨௦௦ மீட்டர் தொலைவு தான் , ஆட்டோ காரர் சரியாக இறக்கி விடுவார் என்றேன். ஒரு சிறு மௌனத்திற்கு பிறகு எனக்கு இருப்பு கொள்ளாமல் அந்த குழந்தையைப் பற்றி விசாரித்தேன். "அந்த குழந்தைக்கு எதாவது பிரச்சனையா ?" என்று சன்னக் குரலில் கேட்டேன். அதற்கு அந்த பெண்மணி அந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கும் பார்வை இல்லை என்றும் , இருவரும் பள்ளி தோழிகள் , அதில் ஒரு குழந்தையை தன்வீட்டில் வந்து தங்கி இருந்ததாகவும் , அவளை அவள் வீட்டில் வந்து விடுவதற்காக வந்ததாகவும் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் என் மனம் கனக்க ஆரம்பித்தது .... என்ன சொல்வது என்றே புரியவில்லை. ... அந்த தாயிக்கு ஏற்பட்ட படபடப்பு புது இடம், இரண்டு கண் தெரியாத ஆறு வயது மதிக்கத் தக்க குழந்தைகளுடன் ஐந்து வயது குழந்தை. அவளுடன் பேரம் பேசும் ஷேர் ஆட்டோ காரன்.....மனதில் ஆயிரம் ரணமிருந்தும் புன்னகை மாறாத அந்த தாயின் முகம் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

Monday, January 2, 2012

மனதின் ரீங்காரம்

கூடிநின்ற ஒவ்வொரு தருணமும்
பேசிக்கொண்டிருக்க தோன்றிற்று
வெறுமனே வார்த்தைகளால் மட்டுமல்ல
மனதாலும் கண்களாலும் ..
சொல்லாது போன வார்த்தைகள்
இன்னும் தேங்கிக் கிடக்கிறது
அலைகழித்தபடி கடக்கின்றேன்
தென்னங்கீற்றினூடே நுழைந்த காற்றின்
எழுந்தும் ஓசை போல
எதோ ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்
என் மனது - அதனால்
வெளிவராமல் இருப்பது வார்த்தைகள்
மட்டுமல்ல என் வாழ்க்கையும் தான்