Tuesday, February 22, 2011

பிள்ளைகள் - சொந்தக் கருத்து

என் மகனுக்கு வயது 12. ஆறாவது வகுப்பு படிக்கிறான். இன்று பள்ளியிலிருந்து வந்தவுடன் 'அம்மா நாங்க பார்ட்டி கொண்டாடலாம்னு இருக்கோம்' என்றான்.

அவன் வருவதற்கு முன்பே எனக்கு இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள் வந்துவிட்டன சில பெண் பிள்ளைகளிடமிருந்து. என் மகன் சொன்ன விவரமும் அந்த தொலைபேசி அழைப்புக்கான நோக்கமும் புரிந்தது.

"எங்கே பார்ட்டி?" என்று கேட்டேன் .

திரும்பவும் தொலைபேசி மணி அடிக்கவே, விறு விறுவென அவனே சென்று எடுத்தான்.

" ஹேய் கம் ஆன் டூட், அவன்க வந்தா நான் வருவேன், ஜஸ்ட் டாக் டு தெம், அண்ட் லெட் மீ நோ .. எங்கே பார்ட்டி ஈ ஏ தானே ? சரி ..ஓகே ஓகே.. நீ பேசிட்டு சொல்லு " .

தொலைபேசி வைக்கப்பட்டது.

"அம்மா , என்ன மா சொல்ற, நான் போகட்டுமா? என்றான்.

நானும் அவனிடம் விவரங்கள் அறிய " யாரோட போறீங்க ? என்றேன்.மாம் யு டோன்ட் வொர்ரி, ஒரு அண்ணா கூட்டிட்டு போறாங்க, அவங்க என் பிரெண்ட் தான், என் கிளாஸ் மேட்டோட அண்ணன் தான்" என்றான் சர்வ சாதரணமாக.

அவனும் 'சரி ஓகே , போகல ' என்றான் . நானும் சர்வசாதரணமாக 'முடியாது ' என்று சொல்லிவிட்டு என் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

இவளவும் எதுக்கு சொன்னேன்னு யோசிக்கிறீங்களா ?

நம்ம பிள்ளைகள் எந்த கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றி யோசிக்கலானேன்.

வெளிய செல்வதனால், நல்லது, கேட்டது அறிந்து கொள்வார்கள் என்பது வேறு, ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலை அவர்களை எந்த திசையில் கொண்டுப் போகும் என்பதை நினைத்தால் ஐயமாக உள்ளது.

இப்போதெல்லாம் சில பிள்ளைகள் தன் பிரச்சனைகளை பெற்றோருடன் பகிர்ந்து கொள்வதை விட தன் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் தான் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதற்கு காரணம் பெற்றோர்கள் தன் நேரத்தை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளாமையினால் வருவது. அப்படியே அவர்களுக்கு நல்ல நண்பர்கள் வாய்த்தால், சந்தோசம். இல்லாமல் போனால், அது வேறு மாதிரி சூழ்நிலையில் கொண்டுப் போய் விட்டுவிடும்.

சில குழந்தைகளுக்கு நண்பர்களும் கிட்ட மாட்டார்கள். அது அந்த குழைந்தைகளின் தயக்கமாக இருந்து அதனாலே மன அழுத்தம் வர வாய்ப்புள்ளது.

சிறு பிள்ளைகளுக்கும் மன அழுத்தம் வருமா? என்றால் கண்டிப்பாக வரும். அதனால் குழந்தைகளை பெற்று, நல்ல பள்ளிகூடத்தில் சேர்த்து படிக்கவைத்து , டூஷன் அனுப்பி, கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தால் மட்டும் போதாது, அரவணைப்பு வேண்டும், நண்பன் போல அவர்கள் வயதுக்கே மாறினால் அவர்களும் நம்மை நண்பனாய் பாவித்து நல்முறையில் வருவார்கள்.


No comments:

Post a Comment