Monday, March 14, 2011

பிச்சைகாரனின் ஆறுதல்

இருள் சூழ்ந்திருக்கும் நேரம்
நடைப் பாதையில்
நாய்களோடு நாங்கள்
கொசுக்கள் தாலாட்டுப் பாடும்..
நட்சத்திரங்கள் கண் சிமிட்டும் ..
வாகனம் பறந்துப் போகும் - போகையில்
ஒட்டிக் கொண்டிருக்கும்
சிற்றாடையும் பறக்கும் ..

லட்டியை வைத்துக் கொண்டு
லொட்டு லொட்டென்று
தட்டிவரும் கூர்க்கா..
அவருக்கும் ஓர் தைரியம்
எங்கள் துணையில்
அவர் அலைவதில் ..

வீடில்லை வாசலில்லை - அதனால்
வரியில்லை செலவுமில்லை ..
வட்டிலிலே சோறு இருக்கும்
அதுவும் எப்பவும் நிரந்தரம் இல்லை

இப்படி இருப்பதில்
சுகமிருக்கு..
கட்டை சாய்ந்தால்
தூக்கிப் போட
குப்பை லாரி இருக்கு ..

2 comments:

  1. க‌டைசி வ‌ரி ட‌ச்சிங்கா இருக்கு.. வ‌ரிக‌ள் வெகு இய‌ல்பு :))

    ReplyDelete