கல்பாத்தி அகோரம் - இன்னொரு படைப்பு. கதைக்கு போவதற்கு முன் ..
இயக்குனர் - பாலா, தயாரிப்பு - கல்பாத்தி அகோரம் க்ரூப்ஸ்.
இசை - யுவன் ஷங்கர் ராஜா, கதை - பாலா, திரைக் கதை - பாலா, வசனம் - எஸ் . ராமகிருஷ்ணன்.
நடிகர்கள் நான் சொல்லவே தேவையில்லை, இருந்தாலும் ஒரு தகவலுக்கு ..
ஜி. எம் . குமார் , விஷால் , ஆர்யா , அம்பிகா, ஜஜனி ஐயர், மது ஷாலினி.
கதை பாலாவிற்கு பிடித்த மதுரை பக்கம் தான். தேனீ யில் எடுக்கப்பட்டது. விஷால் ,ஆர்யா இருவருக்கும் அப்பா ஒன்று , தாய் இரண்டு. அம்பிகாவின் மகன் விஷால். தன் பரம்பரை தொழிலான திருட்டை ஆர்யா நடத்தி வருகிறான், விஷால் தயங்குகிறார். அதனால் ஏற்ப்படும் குடும்ப சண்டைகள். அம்பிகா விஷாலையும் திருட சொல்கிறாள். இது தான் அவர்கள் குடும்ப பின்னணி. ஒரு குடும்பத்தில் ஏற்படும் சண்டையை பக்கத்தில் இருந்து பார்க்கும் ஏற்படும் சுவாரஸ்யம் வருகிறது. கொஞ்சம் வசனங்கள் அப்பட்டமாக உண்மை சண்டையை உருவகப்படுத்துகிறது. அது காதுகளை சில சமயம் கூச வைக்கிறது.
அடுத்து ஜி. எம். குமார் . அவர் ஊர் ஜமிந்தார் . நல்லவர் . வல்லவராக இருந்தவர். குழந்தை மனம் கொண்டவராக சித்தரிக்க படுகிறார். அவரை ஏமாற்றி சொத்துக்கள் முக்கால் வாசி பறிபோகிறது. பிள்ளைகளுக்கு பிள்ளையாய் விஷாலும் ஆர்யாவும் துணை இருகிறார்கள்.
அன்பு காட்டுவதற்கு தன் ரத்தமாக தான் இருக்கவேண்டும் என்று அர்த்தம் இல்லை, உண்மையான அன்பை பரிமாறிக் கொள்ள எதிர்மாறான இனமாக தான் இருக்கவேண்டுமா என்ன? இல்லை இல்லை அன்பை எவரிடத்திலும் காட்டமுடியும் என்ற அர்த்தத்தை புரியவைக்கிறார் பாலா.
நான் கடவுளில் மனித வதம் பற்றி சொன்னவர், இதில் மிருக வதம் பற்றி சொல்கிறார். ஆங்காங்கே காட்சிகள் விட்டு விட்டு போனது போல் ஒரு திருப்தியின்மையும் இருக்கிறது.
"இது தான்பா கதை" என்று சொல்லும் அளவு கதையில்லை. ஆனால் , வால்ட்டர் வணங்காமுடி (விஷாலின் கதாபாத்திரத்தின் பெயர்) நம்மை வணங்கவைத்துவிட்டார்.
விஷால் - ஹாட்ஸ் ஆப்.
கும்புடறேன் சாமி ஆர்யாவின் பெயர்.... அவர் செய்யும் லூட்டிகளுக்கு உண்மையில் கும்புடு போடா வைக்கிறார்.
இரண்டு ஜோடிகளுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்கள ? ' ஜோடி' என்ற வார்த்தையிலே அர்த்தம் புரிந்திருக்கும். டூயட் பாடல்கள் இல்லை . அது ஒரு மன திருப்தி.
இன்னொரு "பிதாமகனா" என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் இதில் இரண்டு மகன்கள்.
ஆனால் இன்னொரு பிதாமகன் சூர்யாவையும் விக்ரமையும் பார்ப்பது போல் ஒரு எண்ணம் ஆங்காங்கே உருவாகிறது.
ஜி எம் குமார் - இத்தனை நாள் எங்கே சார் போனீங்க? அவர் திறமையை இந்த படத்தின் மூலம் வெளிகொண்டுவந்தமைக்கு பாலாவிற்கு நன்றி.
ஜி . எம். சார் கலக்கிடீங்க.
அம்பிகா - கதாநாயகியாய் பார்த்த நமக்கு அழகான இன்னொரு விருந்து கொடுத்துள்ளார். அம்பிகா நடிப்பதை நிறுத்திவிடாதீர்கள்.
ஒரே ஒரு காட்சியில் வந்து போகிறார் சூர்யா . சூர்யா கண்களால் பேசிவிட்டு செல்கிறார்.
விஷால் நவரசங்களை காட்டி அசத்துகிறார்....கண்ணீரையும் வரவைக்கிறார்.
ஒவ்வொரு கலைஞனும் தனக்கு அங்கிகாரம் கிடைக்க எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது . உண்மையான திறமை எப்படி யாவது யார்மூலமாவது வெளி வரும் . அதை சொல்லாமல் சொல்கிறார் பாலா.
ஒவ்வொரு கலைஞனின் திறமையை காணவிரும்புவோருக்கு இந்த படம் ஒரு விருந்து. கதை தேடி செல்வோருக்கு
ரோட்டு கடை இட்லி.
சில ரோட்டு கடை இட்லியும் சூப்பரா இருங்குங்க. சாப்பிட்டு பாருங்க..
No comments:
Post a Comment