கண்ணா என
அழைக்கும் போது
என் கண் முன்னே
தோன்றுகிறாய் .
தென்றலாய் மேனித்
தொடுகிறாய்,
நிலவாய் வந்து
காய்கிறாய்,
திசைத் தெரியாமல்
போகையில்
வழிப்போக்கனாய்
வந்து கை கோர்கிறாய்.
தூசியால் கண்கள்
கலங்கினாலும்
துயர் தீர்க்க ஓடி வரும்
உன் கரங்கள்.
எவரிடம் சொல்ல
உன் பெருமை
எனக்கே எனக்கான
என் கள்வா..
தெய்வத் திருவுருவம்
உன் மேனி
அதை தீண்டலாகாது
பரம்பொருளே
ஆடை திருடும்
கள்வனே - அதன்
அர்த்தம் என்னடா
வாசனே ..
உடம்பு என்பது
ஒன்றும் இல்லை
அதை மூடிவைத்தல்
அர்த்தமில்லை ..
உள்ளொளி எழுப்பு
சடப் பொருளே
அதை உணர்த்தவோ
விளையாடுகிறாய்
கருவன்னனே..
அமுதரச வழியும்
உன் சிரிப்பில்
ஆண்களும் தப்புவதில்லை
அர்ச்சுதனே
உனை அன்பெனும்
மாலையால்
தினம் சூடி
திகட்டும் இன்பம்
பெறவேண்டும்
அற்ப உயிர்
போகுமுன்னே
எனை ஆட்கொண்டுவிடு
என் வாசனே...
No comments:
Post a Comment