Sunday, March 13, 2011

கடல்

அலையாய் ஓடி வந்து

அணைத்திடும் உன் கைகள்

அன்னையாய் இருந்து

உலகை காக்கின்றாய்

உன் மடியினில் தான்

எத்தனை உயிரினங்கள்

ஓர் செல்லிலிருந்து

பல செல் வரையிலே

உன் ஆழத்தை கண்டுக் கொள்ள

பல ஆண்டுகள் ஆனதுவே

உன் சீற்றதினாலே

பல உயிர்கள் போனதுவே

உப்பு நீராய் இருந்திடினும்

சுவையாய் மழை நீர் தருகின்றாய்

சூரியனுக்கும் உனக்கும் ஒப்பந்தமோ

சுத்திகரிப்பு ஆலை பல வைத்துள்ளாய்

பூமியிலுள்ள தீவிரவாதம் போல்

உன்னுள்ளும் இருக்கும் எரிமலைகள்

குண்டுகள் போல் நெருப்பை கக்கிடினும்

பாறைகளாய் அதனை மாற்றுகின்றாய்

காற்று தானோ உன் கணவன்

அவன் அசையும் படியே அசைகின்றாய்

கோபம் என்று வந்து விட்டால்

பேரலையாய் மாறி அழிகின்றாய்

படர்ந்து கிடக்கும் பூமியிலே

முக்கால் பங்கு நீ தானே

பெயர் தான் உனக்கு வெவ்வேறு

நீ இன்றி இங்கு பூமி எது.....?!


No comments:

Post a Comment