Friday, March 4, 2011

நடுநிசி நாய்கள் - எனது பார்வையில்

நடுநிசி நாய்கள் - எனது பார்வையில்

பாரதிராஜாவின் "சிவப்பு ரோஜாக்கள் " க்கு பிறகு வந்த சைகொலோஜிக்கள் த்ரிளர்.
இப்போது சிவப்பு ரோஜாக்கள் படம் பார்த்தாலும் மனம் கொஞ்சம் ட்ரம்ஸ் வாசிக்கத்தான் செய்யும். அப்படிஇதயம் ட்ரம்ஸ் வாசித்தவர்கள் தயவு செய்து இந்த படத்தை பார்க்கவேண்டாம்.
என்னடா எடுத்த உடனே இப்படி பீதியை கிளப்புறீங்க, எல்லாம் கேள்விபட்டது தான் என்று சொல்கிறீர்களா ?


சரி ..சொல்றேன் .. அதுக்கு முன்னாடி இந்த கதைக்கு பின்னாடி இருக்குறவங்கள பத்தி சொல்றேன்.
இயக்கம் : கௌத்தம் வாசுதேவன் மேனன்.
நடிகர்கள் : சமீரா ரெட்டி, வீர பஹு, தேவா, ஸ்வப்னா அப்ரகாம், சமந்தா.
தயாரிப்பு: போட்டான் கதாஸ் ப்ரொடக்ஷன் ( குமார், ஜெயராமன், மதன்)
பிப் -18- 2011- வெளியானப் படம்.


துணுக்குகள் : சமீரா ரெட்டி யை தவிர மற்ற அனைவரும் அறிமுகம். (ஆகையால் சிவாஜி range ku எதிர்பார்க்காதீர்கள்.), தெலுங்கிலும் "ERRA GULABILU" மொழி மாற்றம் (dub) செய்யப்பட்டுள்ளது,
கதைக்கு செல்வோமா ?

சமீர் (வீரா) கதையின் நாயகன், சின்ன வயசுலேயே அம்மா இறக்குறாங்க. மும்பையில் அப்பா வளர்ப்பில் வளர்கிறான். . அப்பா ஒரு சைக்கோ. அதை மிகை படுத்தி காட்டவில்லை . அதனால் பாதிப்படையும் சமீர். அவன் வீட்டில் எந்நேரமும் கும்மாளம், ஒரு சின்ன சிவப்பு நிற ஏரியா மாதிரி திகழ்கிறது. எட்டு வயதிலேயே பார்க்க கூடாததும் அவன் கற்பனை செய்ய முடியாதளவு அனுபவிக்கவும் செய்கிறான்.
அதை பார்க்கும் நமக்கும் கொஞ்சம் கலக்கமாகத்தான் இருக்கிறது.
அந்த சூழ்நிலையில் வளர்ந்தமையால் அவனுக்கு மனச்சிதைவு ஏற்படுகிறது அவனுக்கு பதிமூன்று வயதில் .
பக்கத்துவீட்டு பெண்மணி மீனாக்ஷி (ஸ்வப்னா),அறிமுகமாகிறாள். சமீரின் மேல் அனுதாபப்படுகிறாள். திருட்டுத்தனமாக அவன் வீட்டை நோட்டமிட, அதிர்ச்சியடைந்து அங்கிருக்கும் அனைவரையும் போலீஸ் சில் ஒப்படைக்கிறாள். சமீர் அனாதையாக அவளிடம் தஞ்சம் அடைகிறான் அங்கே வீரா என்று அவளால் அழைக்கப் படுகிறாள்.
வீராவுக்கு மீனாட்சியை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறான். அதை மனதிலேஅடக்கி வைத்து, எரிமலைப் போல் வெடித்து சிதர்கிறது.
மீனாட்சியை அம்மா என்று அழைத்தாலும் 'அனைத்தும் அவளே' என்றாகிறது. யாருக்கும் விட்டுத் தர மனம் இல்லாமல் போகிறது.
அந்த சம்பவத்திற்கு பிறகு, மீனாக்ஷி தனக்கொரு துணை தேடிக் கொள்ள நினைக்க, அவளை விரும்பியவனை மணம் முடிக்கிறாள்.
வீரா தன் கட்டுபாட்டில் இல்லாமல் போகிறான்.
மீனாக்ஷி கணவனை கொல்கிறான். ஆக்சிடேண்டலி மெழுகு வத்தி விழுந்து தீ பிடித்து எல்லாம் பற்ற மீனாக்ஷியை காப்பாற்றுகிறான்.

மீனாட்சியுடன் சென்னை வருகிறான்.
பத்தாம் வகுப்பு சென்னையில் தொடர, அதில் ஆர்வம் இல்லாமல் போகிறது.
சென்னையில் ஒரு பெரிய பங்களா ஆள் நடமாட்டம் அதிகமில்லா இடம்.. துணைக்கு நான்கு ஐந்து நாய்களுடன் நாயாக அவன்.
சென்னையில் வேட்டை ஆரம்பமாகிறது. வலை தளம் மூலம் பெண்கள கவர்கிறான். வீடிற்கு அழைத்து வருகிறான். அங்கே அந்த பெண்கள் கொல்லப்படுகிறார்கள்.யாரால் என்பது சஸ்பென்ஸ்.
சச்பன்ச கடைசியில சொல்றேன் ..
ஹீரோயின் சுகன்யா (சமீரா ரெட்டி ) பாதி படத்துக்கு மேல் தான் வராங்க. அவங்க வீராவோட பத்தாவது படிச்சவங்க(இந்தப் படத்துல ). அவங்கள பார்த்ததும் நம்ம ஆளுக்கும் கண்டதும் காதல். அவளை ட்ராக் பண்ணி பிடிக்கிறான். அதில் சில போலீஸ்காரர்கள் கொல்லப்படுகிறார்கள். துப்புத் துலக்க வருகிறார் விஜய் ஏ சி (தேவா)
சமீரா நன்றாக அரை வாங்கி இருக்கிறார் , ( அடுத்த படத்தில் வீரா நீங்க உஷார்...., பதிலுக்கு பதில் கிடைத்தாலும் கிடைக்கும் ).
சுகன்யா தப்பிக்க நினைக்கும் போது சஸ்பன்ஸ் உடைகிறது. மீனாக்ஷி நெருப்புக் காயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு, எட்டு மாதத்திற்கு பின் இறக்கிறாள்.
சமீர் ,வீரா, மீனாக்ஷி அம்மா மூன்று பெர்சனாளிடீஸ் (மல்டிப்பல் பெர்சனாலிட்டி) யோடு இருக்கிறான். வீரா சாந்த சொருபி, தனக்கு ஒரு துணை வேண்டும் என்ற எண்ணத்தில் தேடுகிறான், சமீர், அவனுக்கு நடந்த கொடுமையினால் ஏற்பட்ட வக்கிரத்தோடு, மீனாக்ஷி அம்மா பலிக்கு பலி தீர்த்தல் என்னும் கோணத்தில் வெளிப்படுகிறாள். தனக்கு வாய்த்தத் துணையை சமீர் கொன்றான், அவனுக்குத் துணை வேண்டாம் என்று அந்த கிள்ட்டி கான்ஷியஸ்.
கடைசியாக, சமீரா தப்பிச் செல்வதற்கு முயல, விஜய் (தேவா) காப்பாற்றுகிறான்.

இந்த படத்தின் நல்ல அம்சங்கள்

* பேக் கிரௌண்ட் ஸ்கோர் இல்லாமல் அவ்வளவு விறுவிறுப்பாக செல்கிறது . திகில் ஊட்டுகிறது. நாச்சுரல் சவுண்ட் எபக்ட்ஸ்- திரு ரெங்கநாத் ரவி அவருக்கு கண்டிப்பாக "ஒ" போடவேண்டும்.
* சமீரா வின் நடிப்பு
* சில இடங்களில் இது ஏன் ? எப்படி ? என்ற கேள்வி எழுந்தாலும் ஒரு கம்ப்ளிஷன் இருக்கு.
* டூயட் இல்ல .... ஆனால் "கிஸ் " கள் பல.

கெட்ட அம்சங்கள்
* சில இடங்களில் மிக கீழ்மையாக (வல்கரிட்டி ) காட்டப்பட்டிருக்கு.
* இலை மறைக் காயை சொல்லவேண்டியதை அதிகமாகவும், சொல்ல வரும் கருத்தை குறைவாகச் சித்தரித்து இருப்பதால் அடிப்பட்டுவிடுகிறது.
* வீரா வின் வேடம் கொஞ்சம் அவருக்கு ஜாஸ்தி தான் . இருந்தாலும் ட்ரை செய்திருக்கிறார்.
* எறிந்த மீனாக்ஷி வேடம் கொஞ்சம் பயமுறுத்தவே செய்கிறார்.
* ஓரினசேர்க்கை பற்றி தெரியாதவர்க்கும் பாடம் கற்றுத் தருவது போல் உள்ளது.

கடைசியாக .....
இப்படி ஒரு சுப்ஜெக்ட் ட தைரியமா தேர்வு செஞ்ச கௌதம் மேனன் க்கு ஒரு "ஒ"
பலருக்கு தெரியாத விஷயங்களை வெளிக் கொண்டுவருவது நல்ல செயல் தான் இருப்பினும், அதை டைஜெஸ்ட் பண்ணிக்கிற அளவு மனசு வேண்டும் . அது நம் நாட்டில் குறைவுதான்,
."மனச்சிதைவு " உள்ளவர்கள் அனைவரும் இப்படி இருப்பார்கள் என்று சொல்லமுடியாது என்று கடைசியாக டாக்டர் சொல்லும் அட்வைஸ் மன ஆறுதல்.

மொத்தத்தில் எதையும் செரிமானம் செய்துக் கொள்ளும் மனம்,அதாவது ஏற்கனவே பல ஆங்கில சைக்கோ த்ரில்லர்
பார்த்தவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.

அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .

4 comments:

  1. இன்றுதான் இந்த வலைப்பூ பக்கம் வருகிறேன். Follow பண்றேன். :-)

    ReplyDelete
  2. விமர்சனம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  3. Well said. This movie is not for everyone.

    ReplyDelete