தேடித் தேடித் அலைகின்றேன்
வீதி வழி நடந்திட்டே
விதி வழியைத் தேடிகின்றேன்
ஒரு சாண் வயிற்றுக்குத் தான்
ஓடுது அந்தோ என் பொழப்பு
ஊரிந்தும் உறவிருந்தும்
அனாதையா என் பிறப்பு
ஆணா? பெண்ணா?
அப்படியொரு கேள்வி உண்டு
கைக்கொட்டி சிரித்தபடி
என்னைசுற்றி ஆட்களுண்டு
நல்ல சாதி நாய்களுக்கு
வீட்டுக்குள்ளே இடமிருக்கு
வேள வேளைக்கு அதன்
தட்டினிலே சோறு இருக்கு
மானமுடன் வாழத்தான்
மனசும் இங்கு துடிக்கிறது
என் மனசு படும் பாடு
யாருக்கிங்கே புரிகிறது
வானத்தை போர்வையாக்கி
பல வருஷம் கடத்திட்டேன்
என் விதியை முடிச்சிக்கிட
எத்தனை தரம் முயற்சித்தேன்
வேறேதும் ஆசையில்ல - இந்த
வெள்ளேந்தி மனசுக்குள்ள
இதுவும் ஒரு ஊனமென்று
மனுஷங்களும் நினைக்கொனும்
அடுத்த சென்மமொன்னிருந்தா
ஊனமின்றி பிறக்கோணும்
paravayillai
ReplyDeletenandri thanigaibharathi.
ReplyDelete