Sunday, March 11, 2012

அடோல்ப் ஹிட்லர் - பகுதி 3

ஹிட்லருக்கு நெருங்கிய நண்பர்கள் கிட்டவில்லை. நாடோடியாக திரிந்துக் கொண்டிருந்தார். கையில் இருந்த பணம் குறையவே வேறு வழி இன்றி ஜெர்மனிக்கு பயணம் ஆனார். ஏதாவது சாதித்து தன் ஹீரோயசத்தை வெளிப் படுத்தவேண்டும் என்ற ஆவல் ஹிட்லர் மனதில் கொழுந்து விட்டு எரிந்துக் கொண்டிருந்தது. தான் ஆசைப் பட்டது போல் ஓவியராக முடியவில்லை. ராணுவத்திலாவது சேருவோம் என்ற முடிவெடுத்து தன் இருபத்தைந்தாம் வயதில் ராணுவத்தில் சேர்ந்தார் ஹிட்லர்.

முதலாம் உலகப்போர் வெடிக்கும் நேரம்.... 1914 ஆம் ஆண்டு.


ஆரம்பத்தில் படைவீரராக சேர்ந்தார். முதாலாம் உலகப்போரின் போது எல்லையில்
"ரன்னராக " இருந்தார். அதாவது, போரின் போது போர்வீரர்களுக்கு தகவல்களையும், கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவது தான் பணி. போர் முனையில் குண்டுமழை பொழிய, அச்சமின்றி தன் பணியை கடமை தவறாமல் செய்தமைக்கு ஹிட்லருக்கு ராணுவம் "அயன் கிராஸ்" என்னும் பதக்கம் அணிவித்து கௌரவப்படுத்தியது.
உலகப்போரின் போது "மஸ்டர்ட்" என்னும் விஷவாயு வீசப் பட்டு ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாகப் பார்வை இழந்தது.

' வேர்சைலஸ் ட்ரீட்டி" ஜெர்மையிடம் ஆயுதங்களை பறிமுதல் செய்து , இழப்பீடு தர கட்டளையிட்டது. ஜெர்மனியில் கடன் தீர்க்க வழியின்றியும், வேலையில்லா திண்டாட்டமும், அதிகமானது.

ஜெர்மனி முதாலாம் போரில் தோல்வியாக, ஹிட்லருக்கு பொறுக்க முடியவில்லை. யூதர்களும், கம்யூனிஸ்ட் களும், ஒற்று வேலை பார்த்ததினால் ஜெர்மனி போரில் தோல்வியுற்றது என்பதை ஆழமாக நம்பின்னார். அதை அவரால் தாங்கமுடியாமல் " யூதர்களையும், கம்யூனிஸ்ட் களையும் " பழிவாங்கியே தீருவேன் என சபதம் எடுத்து அழுதார் ஹிட்லர்.

- தொடரும் ..

No comments:

Post a Comment