Wednesday, February 29, 2012

அடோல்ப் ஹிட்லர் - பகுதி 2

அடோல்ப் ஹிட்லரை பற்றி ..... தொடர்கிறது

ஹிட்லருடைய ஒன்றுவிட்ட சகோதரர் பார்த்தக் காட்சியை கேட்டால் அதிர்ச்சியாக இருக்கும் நமக்கு. ஒருமுறை எதோ தவறு செய்துவிட்ட வளர்ப்பு நாயை அடித்த அடியில், அது வீரிட்டு நடுஹாலில் சிறுநீர் கழித்துவிட்டதாம். என்ன கொடுமை ல ... ? தந்தையே இப்படி கொடூரமாக இருந்ததினாலோ என்னவோ மகனுக்கும் அதே மனநிலை போல..

ஹிட்லருக்கு பதினான்கு வயதான போது, தந்தை ச்ற்றோகே வந்து இறந்து போனார். பிறகு அவரின் பென்ஷனில் குடும்பம் சமாளித்தது. அப்பா போனதும் ஹிட்லர் தன் ஆசை நிறைவேற்றிக் கொள்ள வசதியாய் போனது. ஓவியராகி தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்க, அவர் தாயும் மனதை சமாதனப் படுத்திக் கொண்டு செலவுக்குப் பணம் தந்து ஹிட்லரை வழி அனுப்பினார். ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவுக்கு ரயில் ஏறினார் ஹிட்லர்.

வியன்னாவில் இருந்த புகழ்பெற்ற ' ஆர்ட் அகாடமி' யில் சேருவதற்காக முயற்சித்தார் ஹிட்லர். பரிட்சையிலும் கலந்துக் கொண்டார் . அவரின் ஓவியங்கள் சுமாராக இருந்தமையால் நிராகரிக்கப் பட்டார். வேறு வழியில்லாமல் கட்டடக் கலைக்கான கல்வியாவது படிப்போம் என அங்கே சேர முயற்சி எடுத்தார். அடிப்படைக் கல்வி இல்லாததினால் அங்கேயும் அனுமதி மறுக்கப் பட்டது.

வியன்னா வந்த ஓராண்டில் ஹிட்லரின் தாய் இறந்த தகவல் வர.... வாழ்கையே வெறுத்துப் போனார். பிற்பாடு, தாய் சேர்த்துவைத்திருந்த கணிசமான பென்ஷன் பணமும் வீடும் ஹிட்லருக்கு வந்து சேர .....கூடவே இன்னொரு காரியத்தையும் துணிகரமாக செய்தார். தான் இன்னும் மாணவராகத் தொடரவதாக பொய் சர்டிபிகேட்டை அரசுக்கு அனுப்பி, அம்மாவுக்கு வந்த பென்ஷன் தொடர்ந்து தனக்கு வரும் படி ஏற்பாடு செய்துகொண்டார்.
ஹிட்லருக்கு கொஞ்சம் நாடோடி தனமான வாழ்க்கையாக மாறியது . வியன்னாவில் தெருவோர டீக்கடையில் உட்கார்ந்து நாளிதழ்களை ஒரு வரி விடாமல் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அரசியல் ஈடுபாடு வந்தது அப்போது தான்.

தான் ஒரு ஓவியன் என நிருபிக்க, அவ்வப்போது வாட்டர் கலர் ஓவியங்களை வரைவதை ஹாபியாக வைத்திருந்தார். சில ஓவியங்கள் விற்கவும் செய்தன.
ஹிட்லர் யாரிடமும் மனம் திறந்து பேசுவதே இல்லை. நியாமாக அவருக்கு நிறையவே நண்பர்கள் ஏற்பட்டிருக்கவேண்டும். ஆனால், அவர் பேசாதிருந்த காரணத்தினால், ஒரு நட்புகூட அவருக்குக் கிடைக்காமல் போனது.

No comments:

Post a Comment