Tuesday, February 28, 2012

அடால்ப் ஹிட்லர் - பகுதி 1

அடால்ப் ஹிட்லர் - பெயரை கேட்கும் போதே "சும்மா அதிருதுல்ல" என்று சொல்லும் வில்லன் போல கற்பனை செய்துப்பாருங்கள். உலகத்தின் இவர் ஒருவருக்கு மட்டுமே சொந்தாமான பெயர். யாருக்கும் அந்த பெயரை வைக்க இது வரை தைரியம் கிடையாது என்றே சொல்லலாம்.
"கொடூர மனிதன்" என்கிற அடை மொழி வந்ததற்கு காரணம், அவர் மற்ற நாடுகளுடன் அநியாயமாகப் போரிட்டதால் மட்டும் அல்ல. குறிப்பிட்ட சில தவறுகளைச் செய்ததால் வீழ்ச்சியடைந்த மிகப் பெரிய கமாண்டர்களில் இவரும் ஒருவர்.
ஒரு இனத்தையே அழிக்க முடிவெடுத்து, பல லட்சக்கணக்கான அப்பாவிகளை திட்டம் தீட்டி கொன்றவர் ஹிட்லர். வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைய அதுவே காரணம் ஆயிற்று .

ஜெர்மனியில் ஏதோ மூலையில் கேட்பாரற்று திரிந்த மனிதர், எப்படி பிற்பாடு உலகையே ஆட்டிப் படைக்கும் பெரும் அரக்கனாக மாறமுடிந்தது என்ற கேள்வி பலப் பேருக்கு ஏற்பட்டிருப்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
ஹிட்லர் ஒரு சாதனையாளர் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அனால் அவர் செய்த சாதனைகள் பேசப் படவில்லை. அவர் பெயரை உச்சரித்தாலே தர்ம சங்கடமான நிலை தான் ஏற்படுகிறது.

ஹிட்லரின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் பற்றி கொஞ்சம் அலசுவோம்.

ஜனநாயக ரீதியில் தேர்தலில் முறையாக ஜெயித்து, ஆட்சிக்கு வந்தவர் ஹிட்லர் - புரட்சியின் மூலம் அல்ல.
ஹிட்லர் ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியில் குடியேறியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே.
ஹிட்லருக்கு தன் தாத்தா யாரென்று தெரியாதாம், அதாவது ஒரு யூதரினால் ஏமாற்ற பட்டவர் தான் ஹிட்லரின் பாட்டி என்றும், அதனால் யூதர்களின் மீது வெறுப்புக் கொண்டு யூதர் இனத்தையே அழிக்க கிளம்பிவிட்டார் பேரப்பிள்ளை என்ற தகவலும் உண்டு. ஆனால் அதற்கு ஆதாரங்கள் கிடையாது. (தமிழ் சினிமாவில் வரும் பழிவாங்கும் படலம் என்ற ரீல் சுற்றுகிறதா?)

ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவர் ஹிட்லர். அவரின் தந்தை ஆலோய்ஸ் ஹிட்லர் சிரமப் பட்டு உழைத்து, கஸ்டம்ஸ் டிபாட்மென்ட் ஒரு சாதாரண அதிகாரியாக உயர்ந்தார். அவர் வாழ்ந்து வளர்ந்த சூழ்நிலை, அவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. சிரிப்பையே அவர் முகத்தில் காணமுடியாமல் போயிற்று. மிகமிகக் கண்டிப்பான தந்தையாக இருந்தார். சிறு வயதிலிருந்தே ஹிட்லருக்கும் அவர் தந்தைக்கும் கருத்து வேறுபாடுகள் நிறைய இருந்தன.
இவரை போலவே ஹிட்லரும் அரசுப் பணியில் சேர்ந்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ஹிட்லர் ஓவியராக ஆகா ஆசைப்பட்டார்.
ஹிட்லரின் தந்தைக்கு குடிபழக்கம் இருந்தது. குடிவெறியில் தன் தாயை ஏசுவதும் அடிப்பதும் ஹிட்லருக்கு வெறுப்பை ஏற்ப்படுத்த பிளவு அதிகமானது.
வீட்டில் அனைவரையும் அடிமையாகவே நடத்தினார் ஹிட்லரின் தந்தை. அவரை தந்தை என அழைக்கக் கூடாது என்றும் "பெரியவர்" என்று அழைக்கபடவேண்டும் என்று உத்தரவிட்டார். அது மட்டுமல்ல, ஹிட்லரை அவர் "அடால்ப்" என்ற பெயர் வைத்து அழைப்பது இல்லை. மகனைக் கூப்பிட, அவர் விசிலைப் பயன்படுத்தினார். அவர் விசில் ஊதினால் ஓடி வந்து ' அடேன்ஷனில்' நிற்கவேண்டும்........

தொடரும்

2 comments:

  1. மிக அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள் வாசுமதி.

    தொடர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும், உங்கள் ரசிகை,

    புவனா.

    ReplyDelete
  2. Sorry Vasumathi for misspelling your name.....

    ReplyDelete