இந்த படம் ஒரு நாவலை தழுவி எடுக்கப் பட்ட படம். ஐரிஷ் எழுத்தாளர் ஜான் பாயன் ரெண்டரை நாட்களில் எழுதி, முடித்து ஐந்து மில்லியன் காபீஸ் விற்ற பெருமை உண்டு. இந்த கதை இரண்டாதவது போரின் நேரம் அமைந்ததாக இருக்கு. இந்த படத்துல நடிச்சவங்க பற்றி அப்புறம் பேசுவோம். முதல கதைய சொல்றேன்.
எட்டு வயசு பையன் ப்ருனோ. தன் தாய், தந்தை, அக்காவோட சந்தோஷமா வாழ்றான். அவன் வயது கேற்ற விளையாட்டு அவனை சுற்றி நண்பர்கள், ரொம்ப ஆரோக்யமா போய்ட்டிருக்கு. அவன் அப்பா ஈவா பிரான் ஒரு பெரிய பதவியில் வகிக்கும் ஒரு ராணுவ வீரர். அவருக்கு ப்ரோமோஷன் கிடைச்சு நகர் ஆச்சுவத்ஸ்(Auschwitz) என்னும் கிராமப்புறத்திற்கு மாற்றலாகிறார். குடும்பத்துடன் கிளம்ப நேர்கிறது.
அங்கே பெரிய வீடு, ப்ருனோ வை சுற்றி இருக்கும் சூழ்நிலைஅவனுக்கு ஏற்றார் போல்இல்லை. அவன் வயதுகேற்றாற்போல் விளையாடும் வயதில் தோழர்கள் இல்லை. அவன் தாத்தா பாட்டி, அவன் நண்பர்களை ரொம்ப மிஸ் பண்ண ஆரம்பிக்கிறான் .
வீட்டிலேயே ஆசிரியரை வரவழைத்து ப்ருநோவுக்கும், அவன் அக்காவிற்கும் பாடம் நடத்தப் படுகிறது. ரொம்ப வெறுத்து வீட்டை சுற்றி ஆராய ஆரம்பிக்கிறான். தூரத்தில் கூடாரங்கள் போடப்பட்டு சிலர் அங்கே வேலை செய்வதை பார்க்க நேரிடுகிறது. அவர்கள் கோடூ போட்ட பைஜாமாவில் இருப்பதை பார்க்கிறான். அவன் வீட்டில் வயதான பணியாளரும் அதே உடையில் இருப்பதை பார்த்து, தன் தந்தையிடம் பைஜாமாவில் இருப்பவர்கள் யார் என விசாரிக்கிறான். அதற்கு அவன் தந்தை. "அவர் மக்களே அல்ல, அவர்கள் ஜூய் " ("they are people, they are jews") என்று சொல்கிறார். அவனுக்கு புரியாமல் போகிறது.
இப்படியே நாட்கள் ஓட, ப்ருனோவுக்கு அந்த கூடாரங்களில் யார் வசிகிறார்கள்?, அங்கே இருக்கும் சிம்னியில் ஏன் துர்நாற்றம் வருது?என்பதை தெரிந்து கொள்ள ஆசை வருகிறது. யாருக்கும் தெரியாமல் ஆராயத் துவங்குகிறான் . அங்கே ஒரு வேலி. வேலிக்கு அந்த பக்கம் ஒரு பையன். அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிக்கிறான். அவன் பெயர் ஷ்முள்(shmuel) என்றும், அவனுக்கும் எட்டு வயது தான் ஆகிறது என்றும், அவனை போல் மற்றவர்களும் அங்கு ஏன் அடைக்க வைத்து அடிமை படுத்தப்படுகிறார்கள் என்பது தெரியாது என்று சொல்கிறான். அவனுக்கு தெரிந்த ஒன்று அவன் ஒரு ஜூய்.
ப்ருனோ , 'தன்னை நண்பனாய் ஏற்பாயா?' என்று கேட்க அவனும் சம்மதிக்கிறான். சமயம் கிட்டும் போது ஷ்முள்க்கு ப்ருனோ சாப்பிட எடுத்து வருகிறான்.
ஒரு நாள், ஷ்முள் அவனுடைய தந்தையை காணோம் என்றும் அவனுக்கு உதவி செய்வாயா என்று ப்ருனோவை கேட்க. அவனும் 'சரி' என்று சொல்கிறான். இருவரும் திட்டம் தீட்டி, ப்ருனோ ஷ்முள் போலவே பைஜாமா தரித்து, வேலி தாண்டி செல்கிறான். இருவரும் தேடி செல்கிறார்கள். அப்போது அடைக்கப்பட்ட அடிமைகள் சிலரை கும்பலாக ஒரு அறைக்குள் அழைத்து செல்ல நடுவில் இவர்கள் இருவரும் மாட்டி கொள்கின்றனர். இவர்கள் இருவருக்கும் என்ன ஆகிறது? என்ன ஆகி இருக்கும் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? படத்தை பாருங்கள் .
இப்படியே நாட்கள் ஓட, ப்ருனோவுக்கு அந்த கூடாரங்களில் யார் வசிகிறார்கள், அங்கே இருக்கும் சிம்னியில் ஏன் துர்நாற்றம் வருது , அதை பற்றி தெரிந்து கொள்ள ஆசை வருகிறது. யாருக்கும் தெரியாமல் போகிறான். அங்கே ஒரு முள் வேலி. வேலிக்கு அந்த பக்கம் ஒரு பையன். அவனிடம் பேச்சு கொடுக்க ஆரம்பிக்கிறான். அவன் பெயர் ஷ்முள் என்றும், அவனுக்கும் எட்டு வயது தான் ஆகிறது என்றும், அவனை போல் மற்றவர்களும் அங்கு ஏன் அடைக்க வைத்து அடிமை படுத்தப் பட்டிருகிறார்கள் என்பது தெரியாது என்று சொல்கிறான். அவனுக்கு தெரிந்த ஒன்று அவன் ஒரு ஜூய்.
ப்ருனோ , தன்னை நண்பனாய் ஏற்பாயா என்று கேட்க அவனும் சம்மதிக்கிறான். ஷ்முள் கு ப்ருனோ சாப்பிட எடுத்து வருகிறான்.
ஒரு நாள், ஷ்முள் அவனுடைய தந்தையை காணோம் என்றும் அவனுக்கு உதவி செய்வாயா என்று ப்ருனோவை கேட்க. அவனும் 'சரி' என்று சொல்கிறான். இருவரும் திட்டம் தீட்டி, ப்ருனோ ஷ்முள் போலவே பைஜாமா அணிந்து , வேலி தாண்டி செல்கிறான். இருவரும் தேடி செல்கிறார்கள். அப்போது அடைக்கப்பட்ட அடிமைகள் சிலரை கும்பலாக ஒரு அறைக்குள் அழைத்து செல்ல நடுவில் இவர்கள் இருவரும் மாட்டி கொள்கின்றனர். இவர்கள் இருவருக்கும் என்ன ஆகிறது? என்னவாகியிருக்கும்? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? படத்தை பாருங்கள்.....
ரொம்ப அருமையான ஸ்டோரி. அப்படியே அந்த ஹிட்லர் காலத்திருக்கு இண்டேரக்ட கொண்டு போகுது. 'ஜூய்' வா பிறந்தது தான் அவர்கள் செய்த குற்றமா நு மனம் கலங்கும். இந்த கதையில, ப்ருனோ வீட்ல வேலை செய்யும் ஒரு தாத்தா டாக்டர் என்று தெரியா வர, ப்ருனோ அவரிடம் கேட்பான், "டாக்டரா இருந்துட்டு ஏன் உருளைகிழங்கு உரிக்கிறீங்க?" அதற்கு அவரிடம் பதில் இருக்காது. சில சீன்ஸ் ரொம்ப டச்சிங்கா இருக்கு.
இதுல நடிச்சவங்க யாரு ? ப்ருனோ - ஆசா பட்டர் பீல்ட்
அப்பா (ஈவா பிரான்) - டேவிட் தேவ்லிஸ்
டைரக்டர் - மார்க் ஹெர்மன் , கதை - ஜான் பாயன் .