உண்மைக்கும்
படிமத்திற்கும் நடுவில்
ஊடுருவும் என் மனது..
உத்தேசம் இல்லை..
உதாசினப் படுத்த ..
கருதுவமையில்
மாட்டிக் கொண்டு
கலக்கமே மிச்சம்
வெளிச்சத்தில்
நின்றுக் கொண்டு
விடியலைத் தேடி
மறுபரிசீலனைச் செய்கிறேன்
இந்த வாழ்கையை
வாழலாமா அல்லது
விடுதலைப் பெறலாமா !
No comments:
Post a Comment