Friday, March 9, 2012

துணுக்குகள் - 4

விஸ்தாரமான இடத்தில்
விரிந்து கிடக்கும் நிலத்தில்
இறைந்துகிடக்கின்றோம்
கிளிஞ்சள்களாய்
சிலது அலங்காரப்
பொருட்களாய்
சிலது புதைந்து
அலை அடித்து
கரை சேர்ந்துவிட்டோம்
உயிரற்ற ஜடப்
பொருளாய் ....


என்னை விடுவித்துக் கொள்ள
முற்படுகிறேன்...
தடையாய் இருப்பது
அவள் அன்பு மட்டுமே ...

உன் விழியின்
வெளிச்சத்திற்காக
காத்திருக்கிறேன்
அதுவே என்
விடியலென்று...

உன் மௌனமும்
உபசரிப்பும்
அரவணைப்பும்
ஆசை பேச்சும்
இதயத்தை துளைக்குது
நம்பிக்கைத்ரோகமாய்
நான் வீசிய அம்பு
திரும்பி அன்பாய்
என் மீது ...

No comments:

Post a Comment