Sunday, March 4, 2012

அம்புலி - எனது பார்வையில்..




அம்புலி - நிலவின் இன்னொரு பெயர். படத்திற்கு ஏன் அம்புலி என்ற பெயர் வைத்தார்கள் என்ற கேள்வி எழுப்பாமல் பாருங்கள். த்ரில்லர் , பிக்சியஸ் ஸ்டோரி. பழைய என்றால் கொஞ்சம் பழங்காலத்து படங்களை தழுவியிருந்தாலும், தமிழ் படத்தில் முதல் முயற்சி என்று சொல்லலாம்.

அமுதன் (அஜய் ) வேந்தன் (ஸ்ரீஜித்) . கல்லூரி மாணவர்கள். விடுமுறை விட்டப் பிறகும், அமுதன் காதலுக்காக தன் ஊருக்கு செல்லாமல் தன் நண்பன் வேந்தன் ஊரிலேயே தங்குகிறான். வேந்தன் அந்த கல்லூரி காவல்காரனின் மகன் . காலகாலமாக ஒரு விபரீதம் நடந்து வருகிறது. சோள புலத்தில் அம்புலி வந்து வேட்டையாடிகிறதென்றும், சாயங்கால நேரம் அனால் யார்ம வெளியே நடமாட கூடாதென்றும் ஊரு கட்டுப்பாடு வித்தித்து இருக்கிறது. அதை மீறி அமுதன் அந்த சோள காட்டை தாண்டி வர, சத்தம் கேட்டு அரண்டு திரண்டு ஓடி வருகிறான். பின்பு அமுதனும் வேந்தனும் யார் இந்த அம்புலி என்று துப்பு துலக்கி கண்டறிகிறார்கள்..

ஒரு வெளிநாட்டவன் அந்த ஊரில் வசிக்கும் ஒரு கர்பவதியை ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அதனால் ஏற்படும் விளைவு தான் இந்த நிலா வெளிச்சத்தில் நடைபெறும் ரகசியம். அந்த ரகசியம் என்ன? என்பதை திரையில் காணுங்கள்.
செங்கோடன் (பார்த்திபன்) சொலக் காட்டில் தனியாக வாழ்கிறான், அவனை அம்புலி ஒன்றும் செய்ய வில்லை என்பது ஆச்சர்யம். இசை, பரவில்லை . கே . வெங்கட் பிரபு ஷங்கர், சி . எஸ். சாம் , சதீஷ் மற்றும் மெல்வின் சாலமன். மூவரும் சேர்ந்து இசை அமைத்திருகிறார்கள்.

நாராயண் ஹரி ஷங்கர் மற்றும் ஹரீஷ் இந்த படத்தின் இயக்குனர்கள். ஏற்கனவே ஒரு த்ரில்ளீர் படம் எடுத்த அனுபவம் இவர்களுக்கு உண்டு.

இந்த படம் 3d படம். இந்த படம் பிரமாண்டமாக இல்லையென்றாலும், நம் ஆட்கள் வந்து குச்சியை நீட்டுவதும், பேப்பர்களை தூவும் போது நம் மீது விழுவதும்.....(எவளவோ பார்த்துட்டோம்...... இவளவு தானா?) அதே அதே..

ஹீரோ மற்றும் ஹீரோஇன் புதுசு.. அதனால் பெருசாக எதையும் எதிபார்க்க முடியவில்லை.
குழந்தைகளுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். பெரியவர்களுக்கு ...ம்ம்ம்ம்... சரி ஒரு முறை பார்க்க முயற்சி செய்யுங்கள்.

No comments:

Post a Comment