Wednesday, February 29, 2012

துணுக்குகள் -3

இயற்கையோடு
எய்வதினாலோ
இப்போது
ஆடை குறைத்தல்
நாகரீகம்
ஆராயப்படுகிறது..
மீண்டும்
ஆதாமேவாள்
ஆடைகள்
புதுபிக்கப்படுமோ !?!


என் கண்களில் வழிந்த கண்ணீர்
அவன் உறக்கத்தை கலைத்துவிட்டது போலும்
என் செல்பேசியில் அவனின் அழைப்பு மணி

அவள் சிணுங்களில்
நான் விழித்தேன்...
மனதில் ஊறிய
கட்டெறும்பினால் ....

நிந்திக்கத் தெரிந்த
மனதுக்கு
மறக்கத் தெரியவில்லை
இதயம் கல்லாய்
இருப்பதினால்..

No comments:

Post a Comment