காட்டாறு
வெள்ளத்தினால்
உருண்டுவரும்
பாறைகள்
சிலது
மண்துகள்களாய்..
சிலது
கூழாங்கற்களாய் ..
அரிகாரத்தை பூசாமல்
நடித்துக்கொண்டிருக்கிறோம்
ஒவ்வொரு உறவிடம்
ஒவ்வொரு மாதிரி
உனக்காக நீ
நடிக்காமல் ..
மனம் கேட்கும்
கேள்விக்கு
பதில் இல்லை.
குறை ஏதேனும்
கண்டுப் பிடித்து
குற்றம் சாட்டப்படும்
முதிர் கன்னிகள்
முதிர்ச்சியை
மனம் ஏற்றாலும்
ஓயாது புரளி பேசும்
சமுதாயம் .
முதிர்கண்ணன்களுக்கும்
இதே நிலையோ !
Romba nalla irukku onga ezhuththtu. Will always look forward to your postings.
ReplyDelete