Sunday, January 8, 2012

என் மனதில் நின்ற ஒரு சம்பவம்

ஷேர் ஆட்டோ காரன் "எம்மா குழந்தைகளை கூட்டிகிட்டு கீழே இறங்குமா " என்று சத்தம் போட்டார். அதற்க்கு அந்த பெண்மணி "நான் பசங்களுக்கும் பைசா குடுக்கிறேன் பா" என்று சொல்லி பிள்ளைகளை அமரவைத்துக்கொண்டர். கை பேசியில் 'எங்கே? எங்கே?' என கேட்டு வர அவருக்கு அந்த இடம் புதிது என்று கணிக்க முடிந்தது. அந்த பெண் பிள்ளைகளும் "அப்பாடா உட்கார இடம் கிடைத்து ரொம்ப சந்தோசம் ல "என்று பேசி சிரித்துக் கொண்டு வந்தார்கள். அதில் ஒரு குழந்தை பேசுவதில் கொஞ்சம் வித்யாசம் இருந்தது. அந்த குழந்தை ஆட்டிசம் குழந்தை போல தோன்றியது...
கொஞ்சம் இருட்டியும் விட்டது.. அப்போது அந்த பெண் முகத்தில் சின்னக் கவலை தென் பட நானே பேச துவங்கினேன். "நீங்க எங்க போகணும் ?" என் முதல் கேள்வியாக இருந்தது. அதற்க்கு அவர்கள் "தெரியல ங்க எதோ அட்ரஸ் கொடுத்திருக்காங்க.. வேலம்மாள் ஸ்கூல் எங்க தெரியுமா ?" என்று கேட்டார்கள். அதற்க்கு நான் "நான் இறங்கும் இடத்திலிருந்து கொஞ்சம் ௨௦௦ மீட்டர் தொலைவு தான் , ஆட்டோ காரர் சரியாக இறக்கி விடுவார் என்றேன். ஒரு சிறு மௌனத்திற்கு பிறகு எனக்கு இருப்பு கொள்ளாமல் அந்த குழந்தையைப் பற்றி விசாரித்தேன். "அந்த குழந்தைக்கு எதாவது பிரச்சனையா ?" என்று சன்னக் குரலில் கேட்டேன். அதற்கு அந்த பெண்மணி அந்த மூன்று குழந்தைகளில் இரண்டு குழந்தைகளுக்கும் பார்வை இல்லை என்றும் , இருவரும் பள்ளி தோழிகள் , அதில் ஒரு குழந்தையை தன்வீட்டில் வந்து தங்கி இருந்ததாகவும் , அவளை அவள் வீட்டில் வந்து விடுவதற்காக வந்ததாகவும் சொன்னார்கள். கொஞ்ச நேரத்தில் என் மனம் கனக்க ஆரம்பித்தது .... என்ன சொல்வது என்றே புரியவில்லை. ... அந்த தாயிக்கு ஏற்பட்ட படபடப்பு புது இடம், இரண்டு கண் தெரியாத ஆறு வயது மதிக்கத் தக்க குழந்தைகளுடன் ஐந்து வயது குழந்தை. அவளுடன் பேரம் பேசும் ஷேர் ஆட்டோ காரன்.....மனதில் ஆயிரம் ரணமிருந்தும் புன்னகை மாறாத அந்த தாயின் முகம் என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது.

No comments:

Post a Comment