Saturday, December 17, 2011

அன்பே

சிக்கலாகி விடுகிறது
சில நேரங்களில்
நீ
ஒற்றை வார்த்தையில்
பதில் அளிக்கும் பொழுது

குட்டையில் தேங்கிய
தண்ணிரில்
பாசியாய் படிந்த
உன் நினைவுகள்
இப்போது
தண்ணீரும் பாசியும்
வேறுபாடில்லாமல்

நாம் பேசிய
வார்த்தைகள்
அனைத்தையும்
தூசுத் தட்டி
பார்க்கிறேன்

நாசிக்குள் காற்றாய்
புகுந்து
என் உயிருக்குள்
கலந்தவளே ..
காட்சிப் பிழையாய்
இருந்திடாமல்
என் காதலை
ஏற்கத் துணிவாயடி

மனதினுள் புள்ளியிட்டாய்
அதை
கோலமாய் மாற்றிட
இயலாதோ

வண்ணத்துப் பூச்சியாய்
வடிவெடுத்து
என் நெஞ்சுக் கூட்டுக்குள்
புகுந்தவளே
என் மனமும்
காய்ந்திடா மலர்தானடி
அதில் காலம்
முழுதும் இருப்பாயடி

No comments:

Post a Comment