மான் போல் விழிகள் ரெண்டு
தகதகக்கும் உடலும் கொண்டு
மேவி வரும் காற்றினிலே
தாவி வரும் வெள்ளி நிலவே
நழுவிய உன் பார்வையிலே
என் மனம் இங்கு துடிக்குது
பூவும் உன் முகம் கண்டு
தலைத் துவண்டோடுது
தித்திக்கும் தேன் துளி தான் - உன்
அகரங்கள் சுரந்திடுமோ
பூ மொய்க்கும் கருவண்டு - உன்
கரு விழிகள் ஆகிடுமோ
மோன நிலையில் என்னுள்ளே
மோகித்திருகின்றேன்
யாசகம் கேட்க்கும் எனை
யாபித்துக் கொள்வாயடி.
சட்டென பார்க்கும் பார்வை - எனை
சக்கையாய் பிழியுதடி
மெத்தென உன் கால்கள் தொட்டு
மொத்த உயிரும் லயிக்குதடி
காட்டருவி போல் தவழும் - உன்
கட்டுக்குள் அடங்கிய கூந்தல்
வீணை போல் அதை மீட்ட
தேடி வரும் என் விரல் நுனிகள்
உன் பாதையில் நான் வரவே
விலகிச் செல்லும் உன் பாதங்கள்
வேண்டுமடி அது எனக்கு
ஏங்கித் தவிக்கும் என் மனக் கண்கள்.
No comments:
Post a Comment