Tuesday, December 13, 2011

ஒரு கைம்பெண்ணின் சலனம்

சலனமற்று கிடந்த மனதில்
சல்லடையாய் உன் நினைவுகள்

பாரத்தை இறக்கி வைக்க
பார்கின்ற என் மனது

ஒப்பனையற்ற வார்த்தைகளால்
ஓர் வரியில் சொல்லிவிட்டாய்

கட்டுக் கடங்காமல் வருகிறது
கண்ணீர் மழை துளியாய்

மறுப்பு சொல்ல வழியில்லை
வெறுப்புக் காட்ட முடியவில்லை

கருத்தைச் சொல்லி விலகி இருந்தும்
எதிர்த்து நிற்கும் ஆசைகள்

மனத்தால் எண்ணம் ஒன்றினும்
மனிதனுக்கென்று ஒரு ஞாயம் உண்டு

தீயும் சுடும் என் தெரிந்தப் பின்னும்
தீயில் குளிப்பது நல்லதன்று

மனமெனும் குரங்கு வந்து போகும் -அதை
அடக்கி வைத்தல் நல்லதின்று

பேச வேண்டாம், பழக வேண்டாம்
ரசிக்க வேண்டாம் - ஆனாலும்
மறக்கவும் வேண்டாம்

உன் நினைவலைகள்
உரசிக் கொண்டு போகட்டும்

சலமற்று இருப்பது போல்
என் மனமே நடிக்கட்டும்

உன் மேனி தனை தொடும் காற்றில்
என் வாசனை தான் வந்திடுமே-அதில்
என் ஸ்பரிசத்தை உணர்ந்துவிடு
கனவினிலே என்னை தோடு .........


No comments:

Post a Comment