Wednesday, August 15, 2012

ஐயப்பன்

ஐயப்பன், கரு கருவென விழிகள்.. தோல் நிறமும் அதுவே.. வெண்ணிற பற்கள் முகத்தில் சிரிக்க, ஓயாமல் பேசி எங்களை உற்சாகப் படுத்திய சிறுவன் . 
அவனுக்கு பத்தே வயது தான் ஆகிறது. தமக்கை இரண்டு பேர், அண்ணன்கள் இரண்டு பேர். தந்தையும் ஒரு அண்ணணுமே பொருளீட்ட ... எதோ ஓடுகிறது அவர்கள் வாழ்கை சக்கரம். .. மரணம் என்ற சொல் காதில் கேட்கும் போதே சிலருக்கு பயம் வயிற்றில் இருந்து தொடங்கி வெளியே கொப்பளிக்க ஆரம்பிக்கும். .. அதுவும்  தனக்கு நெருங்கிய நபராக  இருக்கும் பட்சத்தில் ரொம்பவே பாதிக்கச் செய்யும். இவன் வாழ்க்கையிலும் அப்படி ஒரு சம்பவம் நடந்திருகிறது. 
சோகம்  உள் இருப்பினும், வெளியே பிரவேசிக்காமல் இருந்தது. 
நான் வரிசையாகக்  கேட்ட கேள்விகளுக்கு உடனடி பதில்கள், ஆனால்  அந்த பதிகள்,  என்னால் ஜீரணிக்க முடியாமல் போனது தான் உண்மை. சமுதாயத்தில் ஒரு நல்ல பிள்ளை உருவாக பெற்றோர்களின் போக்கும், அரவணைப்பும் எவ்வளவு முக்கியமானது... தன் கண் முன்னே இவனின் தாய் தூக்கிலிட்டு கொண்டாள், தன் அப்பா அம்மாவிற்கு சண்டை நடந்தது, பின் மனமுடைந்து அவள் இங்ஙனம் செய்து மாய்த்து கொண்டாள் என்பது எனக்கு செய்தி தான் . இருப்பினும், எத்தனையோ இடங்களில் இப்படி பட்டச் சம்பவங்கள்  நடந்த வண்ணம் தான் இருக்கிறது.. அதனால் பாதிக்கப்  படப் போவது இளையத் தலைமுறையே அன்றி வேறு யாரும் இல்லை .. இது தொடர்கதையாகத் தான் இருக்கப் போகிறது..