Monday, March 14, 2011
பிச்சைகாரனின் ஆறுதல்
கரம் பிடிக்க
Sunday, March 13, 2011
கடல்
அலையாய் ஓடி வந்து
அணைத்திடும் உன் கைகள்
அன்னையாய் இருந்து
உலகை காக்கின்றாய்
உன் மடியினில் தான்
எத்தனை உயிரினங்கள்
ஓர் செல்லிலிருந்து
பல செல் வரையிலே
உன் ஆழத்தை கண்டுக் கொள்ள
பல ஆண்டுகள் ஆனதுவே
உன் சீற்றதினாலே
பல உயிர்கள் போனதுவே
உப்பு நீராய் இருந்திடினும்
சுவையாய் மழை நீர் தருகின்றாய்
சூரியனுக்கும் உனக்கும் ஒப்பந்தமோ
சுத்திகரிப்பு ஆலை பல வைத்துள்ளாய்
பூமியிலுள்ள தீவிரவாதம் போல்
உன்னுள்ளும் இருக்கும் எரிமலைகள்
குண்டுகள் போல் நெருப்பை கக்கிடினும்
பாறைகளாய் அதனை மாற்றுகின்றாய்
காற்று தானோ உன் கணவன்
அவன் அசையும் படியே அசைகின்றாய்
கோபம் என்று வந்து விட்டால்
பேரலையாய் மாறி அழிகின்றாய்
படர்ந்து கிடக்கும் பூமியிலே
முக்கால் பங்கு நீ தானே
பெயர் தான் உனக்கு வெவ்வேறு
நீ இன்றி இங்கு பூமி எது.....?!
காதலை சொல்லிவிடு
கண்ணை நோக்கின்
மனதை பரிகொடுத்தாய்
என்னை நோக்கின்
மனதினை யாசித்தாய்..
பின்னர்
யாசித்தலும் நேசித்தலும்
மறைமுகமாக....
மனதார பகிர்தலே
காதல் ..
மனதிற்குள்ளே
வைத்திருப்பதல்ல..
கனமாக இருக்கும்
காதல்
கணமாய்
மாறிவிடும்
நீ
பகிராமல் போய்விட்டால் ...
தவறேதும் இல்லையடி
அதனை
மனமுவந்து சொல்லிவிடு
உன் மௌனம் வலிக்குதடி
அச்சத்தை தவிர்த்துவிடு ....
நினைவுகள்
உன் கண்களின் கருணையில்...
கனிந்த வார்தைகைளில்...
முத்தங்களின் எச்சிலில்
வழிகிறது துரோகம்.
'மழுப்பிப்' புன்னகைக்க
மனம் மறுக்கிறது ..
என் இயலாமையை
உன் கன்னத்தில் வளர்ந்த
முடிகளாய் நினைத்து
சவரமிட்டுவிட்டாய்
என் பார்வையிலும்
வார்த்தையிலும் சவரமிட்ட
கத்தியைப் போல்
கூர்மயில்லை போலும்
போகட்டும்
காலம் எனும் கடவுள்
புரியவைக்கும் ...
மறந்து போகட்டும்
உன் நினைவலைகள்
அலைகளால் அழிக்கப்பட்ட
காலடி சுவடுகளாய் .....
துணுக்குகள் 1
உன் பிம்பம்
என் மனதில்
சுக்கலாகின..
நீ சொல்லெனும்
கல்லை
விட்டெறிந்ததால் ..
நிலவே
நீ
பிரகாசி
இருளை
அகற்று ..
உன் பிம்பம்
என் கண்ணுக்குள்
நுழைவாயிலாய்
இதயம்
வசிக்கும்
இடமாய்..
தமிழ்
ஆங்கிலத்தை
பார்த்து சொன்னது
நான் தொலைந்தேன்
உன்னால் ..
நீ வளர்ந்தாய்
என்னால் ...
ஆகையால் அன்பு செய்
கண்டவுடன் காதல் என்பார் - சிலர்
காணாமலே காதல் என்பார்
காதலே உண்மையாகும் - அதில்
காமமும் கலந்திருந்தால்
காலத்தால் அழிந்த காதல் - பல
காலகாலமாய் கதையாய் உண்டு
லைலா மஜ்னு காதல் என்று
லயமாய் பேசி சிரிப்போர் உண்டு
ஹோர்மோன் செய்யும் வேலையினாலே
பேயாய் மனமே அலைந்திடுதே
காதல் இல்லையேல் உலகம் இல்லை -என
பொய்யாய் திரியும் மனிதர்களே
காதல் எனப்படும் மடமை ஒழித்து
அன்பை கொடுத்திட முற்படுவோம்
அன்பு என்பது அற்புதச் சொல்
அதற்கு சாதி மதங்கள் தேவை இல்லை
அன்பு என்பது சக்தி தரும் சொல்
அது மனிதன் மிருகம் பார்ப்பதில்லை
உலகம் இயங்குவது அன்பாலே
மனிதம் வளர்ப்போம் அதனாலே ..
Tuesday, March 8, 2011
மகளிர் தினம்
என்ன இது ??????
பெண்ணை அதிசயம் என்று கண்டு வியந்து வணங்கிய காட்டுமிராண்டிகளாக வாழ்ந்த காலம் தான் ஆண்களில் பலர் மனிதர்களாக இருந்திருப்பார்கள்.
நானும் அந்த காலத்தில் காட்டுமிராண்டியாக பிறந்திருக்கலாம்!
மகளிர் தினம் கொண்டாடும் கொடுமையை காணும் காலத்தில் நான் ஏன் பிற்ந்து வாழ்கிறேனோ!!!
பாசமிகு - அப்பா தம்பி அண்ணன் என இனிய உறவுகளை மறந்து பெண்ணியம் பேசும் சில சகோதரிகளோடு எனக்கு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தில்லி போன்ற நகரங்களில் பெண்களாள் பாதித்த ஆண்களின் அமைப்புகளைக் கண்ட வியப்புகள் என்னில் இருப்பினும்.... பெண்கள் வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரியவர்களே!!!!
பெண் தெய்வங்களே உங்களை வணங்குகிறேன்!
அம்மா சித்தி தங்கை அக்கா பெரியம்மா அத்தை மாமி மனைவி நாத்தனார் மகள் என எல்லோரும் எல்லோருக்கும் வேண்டும்; ஆனால் பிறக்கும் குழந்தை மட்டும் "ஆண் குழந்தை போதும்| என்ற மடமையான ஆசை/எண்ணம் 100%
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இல்லாமல் இருக்கட்டும்! இவ்வுலகத்திற்கு நிச்சயம் கிடைக்கும் வெளிச்சம்!
ம்ம்.. உண்மை..போதுமான அளவில் உரிமைகளும் பெற்றுவிட்டோம் என்பதில் ஐயமில்லை.... எவ்வளவோ ஆடவர்கள் செய்யும் அராஜகங்கள் உங்கள் கண்களில் தென்ப்பட்டும் ஏன் பெண்கள் மட்டும் "அப்படி செய்கிறார்கள் இப்படி செய்கிறார்கள்" என்று குறை கூறுகிறீர்கள். சம உரிமை என்பதென்ன ? எல்லாவற்றில்லும் தானே .. அதற்காக கீழ்போக்கு வழியில் செல்லும் பெண்களை ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை. ஆண்களுக்கான ஈகோ தழைத்தோங்கி நிற்கத்தான் செய்கிறது."
யாரும், யாவரும், எதுவும் எதையும் தடுத்திடவில்லை. ஆதிகாலத்தில் பெண்கள் தானே சௌகர்யமாய் கூடாரத்தில் புகுந்துக் கொண்டார்கள். அதற்கு அவர்கள் உடல் ரீதியாக வரும் இயற்க்கை உபத்திரவங்களும் ஒரு காரணம். கூடாரத்தைப் பாதுக்காக்கும் ஆண்கள். அதுவே காலப்போக்கில் வழக்கமாகி விட்டது. பின்பு அதை கூடாரத்தை விட்டு வெளியே வர போராட்டம் நட்த்தவேண்டியதாகி விட்டது. அதற்கு முட்டுக்கட்டையாய் நின்றது ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் தான்.
என்ன படித்து, என்ன பயன்? வாழ்க்கை என்பதென்ன என்ற தெளிவு பிறக்கும் வரை ஒன்றும் நடவாது.
பெண்களும் ஆண்களும் ஒரே உயிரினம் .....அது புரியவேண்டும் முதலில்."
அன்பினிய தோழி வசுமதி, உங்கள் எழுத்துக்களால் இன்றைய பெண்களின் நிலமை முன்னேற தொடர்ந்து எழுத உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன்! இறைவன் உங்களை தொடர்ந்து ஆசீர்வதிக்கட்டும்! நிச்சயம் ஒரு நாள் இந்த சமூகம் உங்கள் எண்ணங்களையும் எழுத்துக்களையும் போற்றும், மதித்து செயலாற்றும் என்று உறுதியாக நம்புகிறேன். வெற்றி நிச்சயம்!"
Sunday, March 6, 2011
பிள்ளைகள் - சொந்தக் கருத்து (தொடர்ச்சி)
திருட்டு - அதை பற்றி பேசுவோம். கோடிக் கோடியாகக் கொள்ளை போகிறது, இதெல்லாம் ஒரு விஷயமா என்று தட்டி கழிக்கும் விஷயம் அல்ல.
பிள்ளைகள் லூட்டி அடிப்பது இயல்பான விஷயம் தான். அதுவே விஷமத்தனமான விஷயம் என்றால் என்ன செய்வது?
முதலில் "இப்படி பிள்ளைகள் விஷமங்கள் செய்வார்களா / செய்கிறார்களா" என்று பெற்றோருக்கு தெரிந்திருக்க வேண்டும் . பெற்றோர்களின் கவனக்குறைவால் தான் பிள்ளைகளுக்கு திருடும் பழக்கம் ஏற்படுகிறது என்பது உளநூலின் கருத்து.
சில குழந்தைகள் செய்யும் திருட்டு ஏன் என்றே தெரியாமல் இருக்கும். திருடும் பொருள் அவர்களுக்கு தேவைப் படாமலும் இருக்கலாம். ஆனால் எதோ ஒரு உந்துதல் காரணமாக திருடச் செய்வார்கள்.
முதலில் குழந்தை திருட ஆரம்பிப்பது தெரிய நேரிட்டால், ஏன்? எதற்கு ? அப்படி செய்வது தவறு என்று அறிவுரை கூறுவது நல்லது. அதுவே இரண்டாவது முறை செய்தானாயின் , கண்டிப்பது, அல்லது எங்கே திருட நேர்ந்ததோ அவர்களிடம் பெர்சனலாக மன்னிப்பு கேட்கவைப்பது நல்லது.
மேலும் மேலும் திருட்டு நிற்காமல் போனால் ஒரு ஆலோசகர் (சைகொலஜி / ச்ய்கியற்றிஸ்ட் )
அறிவுரை கேட்டு இயல் படுவது நல்லது.
நிறுத்தாமல் திருடும் பழக்கம் உள்ளவர்கள் க்லேப்டோமானியா (kleptomania) என்னும் நோயினால் பாதிக்க பட்டிருக்கலாம்.
அதை ஏன் செய்கிறார்கள் என்ற காரணம் தெரியாமல் செய்வார்கள். மன எதிர்ப்பு/ கட்டுப்பாடு
இல்லாமல் போவதால்,ஏற்படுகிறது . மன அழுத்தம், விசாரம் இருக்கும் காரணத்தினால் வருகிறது.
அடுத்து டிபிகல் தெப்ட் (typical theft) செய்பவர்களும் உண்டு. அவர்கள் செய்யும் திருட்டு பழிவாங்கும் உணர்ச்சியினாலோ, கோபத்தினாலோ, பெற்றோரின் கவனத்தை ஈர்ப்பதற்காகவோ, முறைகேடான வகையில் ஈடுபடுவதற்கான முயற்சியில் இறங்கவோ இருக்கலாம்.
பெற்றோரின் கவனம் போதுமல்லாமல் இருப்பதும், நெகடிவாக(negative) கவனம் செழுத்துவதும் ஒன்று தான்.
உதாரணத்திற்கு, வேலை முடிந்து வரும் போது குழந்தைக்கு வாங்கி வந்து, அவர்களுக்கு போதுமான நேரம் ஒதுக்காமல் போவது அவர்களுக்கு வெறுப்பை அதிகரிக்கும்.
ஆகையால் பெற்றோர்கள் கவனத்திற்கு, பிள்ளைகளை பெற்றுவிட்டால் மட்டும் போதாது.. .. கவனம் தேவை.
இந்த சமூகம் என்ன பெண்களுக்கு கொடுப்பது? நீங்கள் எடுத்தக் கொள்ள வேண்டிய உரிமைகளை இனி பறிக்க வருபவர் யார்???
பெண்களுக்கு இன்னமும் முழுமையாக கல்வியும் சட்டம் சம்பந்தப்பட்ட விழுப்புணர்வும் இதற்கொரு வழி வகுக்குமா?"