Monday, February 28, 2011
முடிவு
Saturday, February 26, 2011
கடல்
அலையாய் ஓடி வந்து
அணைத்திடும் உன் கைகள்
அன்னையாய் இருந்து
உலகை காக்கின்றாய்
உன் மடியினில் தான்
எத்தனை உயிரினங்கள்
ஓர் செல்லிலிருந்து
பல செல் வரையிலே
உன் ஆழத்தை கண்டுக் கொள்ள
பல ஆண்டுகள் ஆனதுவே
உன் சீற்றதினாலே
பல உயிர்கள் போனதுவே
உப்பு நீராய் இருந்திடினும்
சுவையாய் மழை நீர் தருகின்றாய்
சூரியனுக்கும் உனக்கும் ஒப்பந்தமோ
சுத்திகரிப்பு ஆலை பல வைத்துள்ளாய்
பூமியிலுள்ள தீவிரவாதம் போல்
உன்னுள்ளும் இருக்கும் எரிமலைகள்
குண்டுகள் போல் நெருப்பை கக்கிடினும்
பாறைகளாய் அதனை மாற்றுகின்றாய்
காற்று தானோ உன் கணவன்
அவன் அசையும் படியே அசைகின்றாய்
கோபம் என்று வந்து விட்டால்
பேரலையாய் மாறி அழிகின்றாய்
படர்ந்து கிடக்கும் பூமியிலே
முக்கால் பங்கு நீ தானே
பெயர் தான் உனக்கு வெவ்வேறு
நீ இன்றி இங்கு பூமி எது.....?!
பிள்ளைகள் - சொந்தக் கருத்து (தொடர்ச்சி )
சில ச்டஜஸ் ஆக பிரிகிறார்.
Wednesday, February 23, 2011
பிள்ளைகள்.. சொந்தக் கருத்து
Tuesday, February 22, 2011
பிள்ளைகள் - சொந்தக் கருத்து
என் மகனுக்கு வயது 12. ஆறாவது வகுப்பு படிக்கிறான். இன்று பள்ளியிலிருந்து வந்தவுடன் 'அம்மா நாங்க பார்ட்டி கொண்டாடலாம்னு இருக்கோம்' என்றான்.
அவன் வருவதற்கு முன்பே எனக்கு இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள் வந்துவிட்டன சில பெண் பிள்ளைகளிடமிருந்து. என் மகன் சொன்ன விவரமும் அந்த தொலைபேசி அழைப்புக்கான நோக்கமும் புரிந்தது.
"எங்கே பார்ட்டி?" என்று கேட்டேன் .
திரும்பவும் தொலைபேசி மணி அடிக்கவே, விறு விறுவென அவனே சென்று எடுத்தான்.
" ஹேய் கம் ஆன் டூட், அவன்க வந்தா நான் வருவேன், ஜஸ்ட் டாக் டு தெம், அண்ட் லெட் மீ நோ .. எங்கே பார்ட்டி ஈ ஏ தானே ? சரி ..ஓகே ஓகே.. நீ பேசிட்டு சொல்லு " .
தொலைபேசி வைக்கப்பட்டது.
"அம்மா , என்ன மா சொல்ற, நான் போகட்டுமா? என்றான்.
நானும் அவனிடம் விவரங்கள் அறிய " யாரோட போறீங்க ? என்றேன்.மாம் யு டோன்ட் வொர்ரி, ஒரு அண்ணா கூட்டிட்டு போறாங்க, அவங்க என் பிரெண்ட் தான், என் கிளாஸ் மேட்டோட அண்ணன் தான்" என்றான் சர்வ சாதரணமாக.
அவனும் 'சரி ஓகே , போகல ' என்றான் . நானும் சர்வசாதரணமாக 'முடியாது ' என்று சொல்லிவிட்டு என் வேலையை பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.
இவளவும் எதுக்கு சொன்னேன்னு யோசிக்கிறீங்களா ?
நம்ம பிள்ளைகள் எந்த கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றி யோசிக்கலானேன்.
வெளிய செல்வதனால், நல்லது, கேட்டது அறிந்து கொள்வார்கள் என்பது வேறு, ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலை அவர்களை எந்த திசையில் கொண்டுப் போகும் என்பதை நினைத்தால் ஐயமாக உள்ளது.
இப்போதெல்லாம் சில பிள்ளைகள் தன் பிரச்சனைகளை பெற்றோருடன் பகிர்ந்து கொள்வதை விட தன் நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் தான் மகிழ்ச்சி அடைகிறார்கள். அதற்கு காரணம் பெற்றோர்கள் தன் நேரத்தை பிள்ளைகளுடன் பகிர்ந்து கொள்ளாமையினால் வருவது. அப்படியே அவர்களுக்கு நல்ல நண்பர்கள் வாய்த்தால், சந்தோசம். இல்லாமல் போனால், அது வேறு மாதிரி சூழ்நிலையில் கொண்டுப் போய் விட்டுவிடும்.
சில குழந்தைகளுக்கு நண்பர்களும் கிட்ட மாட்டார்கள். அது அந்த குழைந்தைகளின் தயக்கமாக இருந்து அதனாலே மன அழுத்தம் வர வாய்ப்புள்ளது.
சிறு பிள்ளைகளுக்கும் மன அழுத்தம் வருமா? என்றால் கண்டிப்பாக வரும். அதனால் குழந்தைகளை பெற்று, நல்ல பள்ளிகூடத்தில் சேர்த்து படிக்கவைத்து , டூஷன் அனுப்பி, கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தால் மட்டும் போதாது, அரவணைப்பு வேண்டும், நண்பன் போல அவர்கள் வயதுக்கே மாறினால் அவர்களும் நம்மை நண்பனாய் பாவித்து நல்முறையில் வருவார்கள்.
Sunday, February 20, 2011
பயணம் - எனது பார்வையில்
பயணம் - சைலென்ட் மூவீஸ் ,பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் வந்த படம்.
இயக்கம் - ராதாமோகன், இசை - ப்ரவின் மணி.
தமிழ் படத்தில் ஒரு புதிய முயற்சி.
பயணம் கிளம்பும் போது எல்லோருக்கும் ஒவ்வொரு அனுபவம். ஒரு சிலருக்கே இப்படி ஒரு அனுபவம் கிடைத்திருக்கும் . அப்படியொரு த்ரில் உள்ள பயணம் தான் இந்த படத்தின் கதை.
ராதா மோகன் ஒரு புதிய களத்தில் இறங்கி இருக்கிறார்.
நடிகர்கள் - நிறையபேர். அதில் முக்கியமானவர்கள் நாகர்ஜுன், பிரகாஷ்ராஜ், சான கான், ரிஷி, இன்னும் பல. சென்னைலிருந்து டெல்லி கிளம்பும் விமானம் சில தீவிர வாத கும்பலால் கடத்தப் படுகிறது. 100 பயணிகள் உள்ள விமானம். பயணிகள் உயிருடன் வேண்டுமென்றால், யூஸூப் கான் எனும் தீவிரதியை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார்கள். தீவிரவாதியை விடிவித்து பயணிகளை எப்படி காப்பாற்றுவது என்ற போராட்டம் தான் கதை. என் எஸ் ஜி செக்யூரிட்டி ரெப்பாக வருகிறார் ரவீந்திரன் (நாகார்ஜுன் ), மிடுக்கான தோற்றம். கமாண்டோ வேஷம் அவருக்கு அழகாக பொருந்துகிறது. கோமொண்டோஸ் சண்டைப் போடுவது மட்டும் அல்ல பிரச்சனைகளை எப்படி யோசித்து கையாள்கிறார்கள் என்பதை அற்புதமாக சொல்லியிருகிறார்கள்.
அரசும், அரசை சார்ந்த ஊழியர்களும் எங்ஙனம் தீர்வு காணாமல் யோசித்துக் கொண்டே இருப்பது நம்மையும் யோசிக்க வைக்கிறது .
பத்திரிகை துறையினால் வரும் நன்மை, தீமை, அதை சொல்லி இருக்கும் விதமும் அழகு.
படத்திற்கு முதல் பிளஸ் பாயிண்ட் 'விமானம்' . ஆர்ட் டைரக்டர் கதிர் ஒரு 'ஒஹோ ' போடலாம். 'செட்டிங் செய்த விமானம் என்று துளி கூட சந்தேகம் ஏற்படாத வகையில் அருமை.
இரண்டாவது பிளஸ் பாயிண்ட் வசனம்.. டி.எஸ் . ஞானவேல்.
தீவிரவாதிகளை ரொம்பத் தீவிரமாக காட்டமல் கொண்டு சென்று இருக்கிறார்கள். 26/11 ஞாபகத்தில் கொண்டுவராமல் கதையை பார்த்தால் அவர்களும் நல்லவர்கள் என தோன்ற ஆரம்பிக்கும்.
தீவிராதிகள் துப்பாக்கி காட்டி மிரட்டும் போது இருக்கும் அச்சம், ஒரு சில நிமிடங்களில் காணமல் போய்விடுகிறது. பார்லிமெண்டில் சண்டையிட்டு பேச்சு வார்த்தை நடத்துவது போல் இருக்கிறது சில இடங்களில்.
மற்ற படி படம், இந்த பயணம், கலவரத்துடன் போகும் அழகான பயணம்.
இந்த பயணத்தை மறக்காமல், மறுக்காமல் பாருங்கள் . ஒரு புது அனுபவம் கிடைக்கும்.
Saturday, February 19, 2011
127 HOURS - எனது பார்வையில்
127 HOURS - எனது பார்வையில்
2010 பயோக்கிராபிகல் அட்வென்சர் படம். ARON RALSTON AUTOBIOGRAPHY " BETWEEN A ROCK AND A HARD PIECE".
இயக்குனர் "ஸ்லம் டாக் மில்லியனர்" புகழ் பாயில். ஏற்கனவே ரெண்டு படம் இயக்கி இருகாரு.
தயாரிப்பு : கிறிஸ்டியன் கோல்சன். இசை : எ ஆர் ரஹ்மான்.
சரி இப்போது கதைத் தளத்தை பாப்போம்.
நம்ம ஹீரோ (ஜேம்ஸ் பிரான்கோ ) மலை ஏறுவதில் ஆர்வம் உள்ளவர். துணிகரமான செயலில் ஈடுபடனு ஆசை. அந்த முயற்சியில மலை ஊடே போறாரு.
உள்ள இறங்கும் போது ஒரு பாறை உருண்டு அவர் கை மாட்டிக்குது. இழுக்க முயற்சி செய்தும் முடியல. ஒரு நாள் போச்சு, ரெண்டு நாள் போச்சு. எடுத்து வந்த தண்ணீ , சாப்பாடு எல்லாம் தீர்ந்து போயிடுது. தன் கையை வெட்டி ஆச்சும் தப்பிக்கலாம் என்று முயற்சிக்க, அதுவும் முடியல . ஏன்னா அவன் எடுத்துட்டு போற கத்தி மொட்டை கத்தியா இருக்கு.'. ஹீரோ கை மாட்டிகிட்டு அவஸ்த்தை படுவது நாம மாட்டிகிட்டா எப்படி இருக்குமோ அப்படி ஒரு பாதிப்பு ஏற்படுது. தண்ணீர் தீர்ந்து பொய் ஒரு கட்டத்துல சிறுநீரை குடிக்கிறான். அந்த இடுக்கிலேயே தூங்குறான். கனவு வருது. அதுல அவன் அப்பா, அம்மா, நண்பர்கள், அவன் தங்கை, காதலி எல்லாம் வந்து போறாங்க.
செத்து போய்டுவோம் என்று எண்ணம் வருது. அப்புறம் இல்ல வாழனும் வாழ்த்தே ஆகணும் என்று ஐந்தாவது நாள்
எலும்பை உடைத்து, நரம்பை கிழித்து கையை வெளியே எடுக்கிறான். கஷ்டப்பட்டு வெளியே வரான். அவன் நல்ல நேரம் ஒரு குடும்பம் இவன போல மலை ஏற ஆர்வம் உள்ளவர்கள், அவனை பார்க்க நேர்ந்து காப்பாற்றுகிறார்கள்
தன் வாழ்கையை வாழ்ந்தாக வேண்டும் என்று அவனின் ஒவ்வொரு முயற்சியும் நல்ல இருக்கு. அவன் கையை வெட்டி கொள்ள முயற்சிக்கும் போது, "DON'T BUY ANY TOOLS FROM CHINA"
அப்படி நு சொல்வான். மனச கஷ்டப்படுத்தினாலும் அந்த சிரிப்பு ஒரு ஆறுதல்.
இதழ் வறண்டு போக, தன் கையை கிழித்து சில துளி ரத்தத்தை ஒற்றி கொள்வான்.
அப்படி வாழ்ந்து என்னடா சாதிக்கப் போற என்று கேட்க தோணுது...
இசை நாம் சில படங்களில் கேட்டிருந்தாலும், அந்த ஊர் மக்களுக்கு அது புதுசு.. அதனால் இசை எ ஆர் ரஹ்மான் நம்ம ஊரு ராசா என மார் தட்டி கொள்ளலாம்.
NOMINATED FOR 6 ACADEMY AWARDS.
பார்க்காதவர்கள் தவற விடவேண்டாம் என்று சொல்ல மாட்டேன். வாய்ப்பு கிடைத்தால் தவறாமல் பாருங்கள்.
Sunday, February 13, 2011
ஆகையால் அன்பு செய்
கண்டவுடன் காதல் என்பார் - சிலர்
காணாமலே காதல் என்பார்
காதலே உண்மையாகும் - அதில்
காமமும் கலந்திருந்தால்
காலத்தால் அழிந்த காதல் - பல
காலகாலமாய் கதையாய் உண்டு
லைலா மஜ்னு காதல் என்று
லயமாய் பேசி சிரிப்போர் உண்டு
ஹோர்மோன் செய்யும் வேலையினாலே
பேயாய் மனமே அலைந்திடுதே
காதல் இல்லையேல் உலகம் இல்லை -என
பொய்யாய் திரியும் மனிதர்களே
காதல் எனப்படும் மடமை ஒழித்து
அன்பை கொடுத்திட முற்படுவோம்
அன்பு என்பது அற்புதச் சொல்
அதற்கு சாதி மதங்கள் தேவை இல்லை
அன்பு என்பது சக்தி தரும் சொல்
அது மனிதன் மிருகம் பார்ப்பதில்லை
உலகம் இயங்குவது அன்பாலே
மனிதம் வளர்ப்போம் அதனாலே ..
ஆசை இல்லை.
வட்டமிட ஆசையில்லை
கண்ணை பறிக்கும் வைரங்களை
பூட்டிக் கொள்ள ஆசையில்லை
பட்டு சேலை ஆசையில்லை
பருவ லீலை ஆசையில்லை
கட்டுக் கூந்தல் முடித்து அதில்
மல்லி சூட ஆசையில்லை
பாட்டுப் பாட ஆசையில்லை
ஆட்டம் போடா ஆசையில்லை
பஞ்சவர்ண ஆடை கட்டி
பவனி வர ஆசையில்லை
பிஞ்சு முகம் வாடுகையில்
வாரியணைக்க ஆசையில்லை
பஞ்சு மெத்தை இருந்தபின்னும்
படுத்துறங்க ஆசையில்லை
கருமேகம் பார்க்க ஆசையில்லை
கடும் குளிரில் நனைய ஆசையில்லை
எனை வாழ்த்தி பேச ஆசையில்லை
ஏட்டில் பதிய ஆசையில்லை
ஒரே ஒரு ஆசையுண்டு
கண் மூடி உறங்கையிலே
மரணம் தொட ஆசை உண்டு......
Tuesday, February 8, 2011
ஒரு கைம்பெண்ணின் சலனம்
சல்லடையாய் உன் நினைவுகள்
பாரத்தை இறக்கி வைக்க
பார்கின்ற என் மனது
ஒப்பனையற்ற வார்த்தைகளால்
ஓர் வரியில் சொல்லிவிட்டாய்
கட்டுக் கடங்காமல் வருகிறது
கண்ணீர் மழை துளியாய்
மறுப்பு சொல்ல வழியில்லை
வெறுப்புக் காட்ட முடியவில்லை
கருத்தைச் சொல்லி விலகி இருந்தும்
எதிர்த்து நிற்கும் ஆசைகள்
மனத்தால் எண்ணம் ஒன்றினும்
மனிதனுக்கென்று ஒரு ஞாயம் உண்டு
தீயும் சுடும் என் தெரிந்தப் பின்னும்
தீயில் குளிப்பது நல்லதன்று
மனமெனும் குரங்கு வந்து போகும் -அதை
அடக்கி வைத்தல் நல்லதின்று
பேச வேண்டாம், பழக வேண்டாம்
ரசிக்க வேண்டாம் - ஆனாலும்
மறக்கவும் வேண்டாம்
உன் நினைவலைகள்
உரசிக் கொண்டு போகட்டும்
சலமற்று இருப்பது போல்
என் மனமே நடிக்கட்டும்
உன் மேனி தனை தொடும் காற்றில்
என் வாசனை தான் வந்திடுமே-அதில்
என் ஸ்பரிசத்தை உணர்ந்துவிடு
கனவினிலே என்னை தோடு .........
Monday, February 7, 2011
Sunday, February 6, 2011
கனவு பூக்கள் மலர்கவே
கனவு சிலருக்கு
கலைந்துப் போகும்
கோலங்களாய்
சிலருக்கு மலர்ந்து
சிலிர்க்கவைக்கும் நினைவுகளாய்
சக்திதரும் இயக்கமாயிருப்பின்
கனவே நீ கலையாதே ...
ஒவ்வொரு ஜீவனிலும்
ஒட்டிக் கொண்டு
அனைவரையும்
ஆட்கொண்டுவிடு...
எம் தலைவர் செப்பியது போல்
எண்ணமாய் மாறிவிடு
விழித்துக் கொண்டு
கனவுக் காண்...
தோல்வி படிக்கட்டுகள்
ஏறக் கற்றுக் கொடுக்கும்
வெற்றி மாலைகள்
சூடக் காண் ...
போராடு... ...
Friday, February 4, 2011
புயலுக்கு அஞ்சி
கோரமாய் வீசும் காற்று
கலைந்த ஆடைகளை
சரி செய்ய முடியாமல்
தவிக்கும் மரங்கள்..
ஓடிப் பிடித்து வட்டமாய்
சுற்றி விளையாடும்
பேப்பர் குப்பைகள்..
ஓலமிட்டுத் திரியும்
ஒய்யாரப் பறவைகள்..
இப்பவோ.. அப்பவோ என
தரையைத் தொட ஆசைப்படும்
தென்னங் கிளைகள் ..
திக்குத் தெரியாமல்
தெருவோரம் ஓடும் நாய்கள்..
ஒதுங்க வழியின்றி
தாங்கி நடக்கும் பிச்சைக்காரி
தன் வாகனத்தைப் காப்பாற்ற
மூடிய கார்பார்கிங்கில்
காரை நிறுத்தும் ஓர் குடிமகன்..