Monday, January 31, 2011

"STRAY BIRDS" (continuation)

THESE LITTLE THOUGHTS ARE THE RUSTLE OF LEAVES; THEY HAVE THEIR WHISPER OF JOY IN MY MIND.

இந்த சின்னச் சின்ன சிந்தனைகள் இலைகளின் சலசலப்பு மட்டுமே ;
அவற்றின் ஆனந்த ரகசியப் பேச்சு என் மனதோடு தான்.

"WHAT LANGUAGE IS THINE , O SEA?"
"THE LANGUAGE OF EXTERNAL QUESTIONS."
"WHAT LANGUAGE IS THY ANSWER , O SKY?"
"THE LANGUAGE OF ETERNAL SILENCE."

"கடலே, உனது மொழி தான் என்ன?"
"எனது மொழியோ, நிரந்தர கேள்வி."
"வானமே, உனது விடை தான் என்ன?"
"எனது விடையோ, நிரந்தர மௌனம்."


Friday, January 28, 2011

"STRAY BIRDS"

"IT IS THE TEARS OF THE EARTH THAT KEEP HER SMILES IN BLOOM."

"பூமி தன் புன்னைகையால் செழித்திருப்பதர்க்கு காரணம் அதன் கண்ணீரே."

"IF U SHED TEARS WHEN U MISS THE SUN, YOU ALSO MISS THE STARS."

"ஆதவன் மறைகிறது என்று வருந்துகிறீர்கள் என்றால், நீங்கள் நட்சத்திரங்களை இழந்துவிடுவீர்கள் ."

"SORROW IS HUSHED INTO PEACE IN MY HEART LIKE THE EVENING AMONG SILENT TREES."
"துயரம் அமைதியாக அடங்கியது என் இதயத்தில் , அந்திப் பொழுது மௌன மரங்களின் இடையே மறைவது போல.."

Thursday, January 27, 2011

'STRAY BIRDS' by Rabindranath Tagore

தாகூரின் கவிதைகள் பெரும்பாலும் சந்த ஒழுங்கு கொண்ட இசைப்பாடல்களே, ஆனால் அவ்வப்போது, மனதில் மின்னி மறையும் மின்னல் வீச்சுகளைப் போன்ற சிந்தனைகளை அவர் பதிவு செய்து வைத்திருக்கிறார்.
கவிதைகளின் அழகும், சிந்தனை இறுக்கமும் கொண்ட அந்த வரிகளைத் தொகுத்து 'STRAY BIRDS ' என்ற பெயரில் நூலாக ஆக்கியிருக்கிறார் .
இங்கே ஒவ்வொரு நாள் இரண்டு பாடல்களை மொழி பெயர்த்து வழங்க இருக்கிறேன்.


"THE WORLD HAS KISSED MY SOUL WITH ITS PAIN, ASKING FOR ITS RETURN IN SONGS."

"இந்த உலகம்
என் ஆத்மாவை முத்தமிட்டது ,
தன் வேதனை கொண்டு.
பதிலுக்குக் கேட்கிறது
பாடல்களை!"

"THE CANAL LOVES TO THINK THAT RIVERS EXISTS SOLELY TO SUPPLY IT WITH WATER."
"தனக்குத் தண்ணீர் வழங்கவே ஆறு உயிர் வாழ்கிறதென்று நினைக்க ஆசை வாய்காலுக்கு!"

Wednesday, January 26, 2011

ஒரு அரவாணியின் ஆதங்கம்

தொலைத்து விட்ட தருணங்களை
தேடித் தேடித் அலைகின்றேன்
வீதி வழி நடந்திட்டே
விதி வழியைத் தேடிகின்றேன்
ஒரு சாண் வயிற்றுக்குத் தான்
ஓடுது அந்தோ என் பொழப்பு
ஊரிந்தும் உறவிருந்தும்
அனாதையா என் பிறப்பு
ஆணா? பெண்ணா?
அப்படியொரு கேள்வி உண்டு
கைக்கொட்டி சிரித்தபடி
என்னைசுற்றி ஆட்களுண்டு
நல்ல சாதி நாய்களுக்கு
வீட்டுக்குள்ளே இடமிருக்கு
வேள வேளைக்கு அதன்
தட்டினிலே சோறு இருக்கு
மானமுடன் வாழத்தான்
மனசும் இங்கு துடிக்கிறது
என் மனசு படும் பாடு
யாருக்கிங்கே புரிகிறது
வானத்தை போர்வையாக்கி
பல வருஷம் கடத்திட்டேன்
என் விதியை முடிச்சிக்கிட
எத்தனை தரம் முயற்சித்தேன்
வேறேதும் ஆசையில்ல - இந்த
வெள்ளேந்தி மனசுக்குள்ள
இதுவும் ஒரு ஊனமென்று
மனுஷங்களும் நினைக்கொனும்
அடுத்த சென்மமொன்னிருந்தா
ஊனமின்றி பிறக்கோணும்